கடலில் எல்லை தாண்டுவது தமிழன் என்பதில்தான் பிரச்சினை - சீமான் குற்றச்சாட்டு
கடலில் எல்லை தாண்டுவது தொடர்பாக தமிழர்கள் மட்டுமே தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
ராமேஸ்வரம் : தமிழர்கள் மட்டுமே உலகம் முழுவதும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கடலில் எல்லை தாண்டும் தமிழர்கள் மட்டுமே கைது செய்யப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து கடந்த 4 நாட்களாக தங்கச்சி மடத்தில் மீனவர்கள் போராடி வருகின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் வந்தால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

மீனவர்களின் போராட்டத்திற்கு பல அரசியல் கட்சித்தலைவர்களும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தங்கச்சி மடத்திற்கு சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். பிரிட்ஜோவின் பெற்றோர், உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், மீனவர்களின் போராட்டத்தில் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலில் எல்லை தாண்டும் மீனவர்கள் யார் என்பதில் பிரச்சினையில்லை என்றும் தமிழன் என்பதால்தான் கைது செய்யப்படுகின்றனர், சுடப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
உலகம் முழுவதும் தமிழர்கள் மட்டுமே தாக்குதலுக்கு ஆளாவதாகவும், அதை தட்டிக்கேட்க சரியான அரசு இல்லை என்றும் சீமான் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் சீமான் குற்றம் சாட்டினார். அதிகாரம் தங்கள் கைகளுக்கு வரும் போது தட்டிக்கேட்போம் என்றும் சீமான் தெரிவித்தார்.
சிலை கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டால் தொழிலதிபர் என்று கூறும் ஊடகங்கள், வயிற்று பிழைப்புக்காக மரம் வெட்டுபவர்களை கடத்தல்காரர்கள் என்று எழுதுவதாக குற்றம் சாட்டினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications