விஜயகாந்த்தின் "நானே ராஜா.. நானே மந்திரி" பேச்சு.. கருத்துக் கூற தமிழிசை மறுப்பு!
கோவை: திமுக கூட்டணியை ஊழல் கூட்டணி என்றும் மக்கள் நலக் கூட்டணியை பயனற்ற கூட்டணி என்றும் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் வர்ணித்துள்ளார்.
அதேசமயம், "நானே ராஜா.. நானே மந்திரி" என்ற ரீதியில் காஞ்சிபுரம் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் பேச்சு குறித்து கருத்து கூற அவர் மறுத்து விட்டார்.

தேமுதிகவை தனது கூட்டணியில் இணைக்க தீவிரமாக முயன்று வருகிறது பாஜக. ஒரு வேளை தேமுதிக வராவிட்டால் வேறு வழியில்லாமல் அதிமுக பக்கம் போக வேண்டிய நிலை அதற்கு ஏற்படும்.
இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த் பேசிய பேச்சு எல்லோரையும் தெளிவாக குழப்பி விட்டது. வழக்கம் போல பூசி மெழுகி விட்டுப் போய் விட்டார் விஜயகாந்த்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் தமிழிசை பேசுகையில், பாஜகவின் பங்கு இல்லாமல், இங்கு யாரும் ஆட்சியமைத்துவிட முடியாது. அனைத்து கட்சிகளிலும், அதன் தலைவர்களே, "கிங்" ஆக இருக்க வேண்டுமென்று விரும்புவர். விஜயகாந்தி்ன் கிங் கருத்திற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை.
திமுக - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணி ஊழல் கூட்டணி. மக்கள் நலக்கூட்டணியோ, பலனற்ற கூட்டணி என்றார் அவர்.












Click it and Unblock the Notifications