மகாத்மாவுடன் இணைந்து விட்டார் வாஜ்பாய்.. ஒன்இந்தியாவுக்கு தமிழிசை பேட்டி
வாஜ்பாய் நாட்டுக்கு செய்த சேவையை நாம் மறக்க முடியாது என தமிழிசை தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: வாழும் மகாத்மா என்று அழைத்த வாஜ்பாய், கடைசியில் அந்த மகாத்மாவோடே இணைந்துவிட்டதை என்னால் நினைத்துகூட பார்க்க முடியவில்லை என்று தமிழிசை சவுந்தராஜன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய் மறைவு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஒன் இந்தியாவுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய வருத்தம் நிறைந்த வார்த்தைகள் இதோ:
"வாழும் மகாத்மா என்று அன்போடு நாங்கள் அழைத்து கொண்டிருந்த வாஜ்பாய், இன்று மகாத்மாவோடே இணைந்து விட்டார். அவர் இப்போது உயிருடன் இல்லை என்ற விஷயத்தையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வளர்ச்சியின் நாயகனாக அவர் திகழ்ந்து கொண்டிருந்தார். இன்று அவர் இல்லை என்றாலும் நாமெல்லாம் நமது வாகனத்தை ஓட்டும்போது, நிச்சயமாக அந்த மாமனிதர் நம் நினைவுக்கு வருவார். அது மட்டுமல்ல இலங்கை தமிழர் பிரச்சனையை அவர் எந்த அளவுக்கு இதமாக கையாண்டு எந்தவித உயிர்ச்சேதமும் இல்லாமல் பார்த்துக் கொண்டார் என்பது நாமெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கார்கில் போரை வெற்றி கொண்டார். பொக்ரான் வெடிகுண்டை வெடித்து அணுசக்தி நாடாக இந்த நாட்டை முன்னிறுத்தினார். இதையெல்லாம் செய்த ஒரு மாமனிதரை நாம் இழந்திருக்கிறோம். மிகவும் வருத்தமாக உள்ளது. ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இருப்பதும், வளர்ச்சியை நோக்கியுள்ள அரசியல்வாதியாக இருப்பதுமே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி."
இவ்வாறு தமிழிசை சவுந்தராஜன் வாஜ்பாய்க்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications