தனித் தமிழ்ச் சிறுகதைப் போட்டி
புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த தனித் தமிழியக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மொத்தப் பரிசுத் தொகை ரூ. 3000 ஆகும்.
கதைகள் வந்து சேர வேண்டிய கடைசிநாள்: 31.7.2014.
முகவரி : முனைவர் க.தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ்இயக்கம்,
66, மாரியம்மன்கோயில் தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி - 605009
தொலைபேசி எண்: 0413-2247072
நெறிமுறைகள்:
1. அ 4 தாளில் 5 பக்கம் கொண்ட, குமுகாயக் கதைகள், பிறசொற்கள், பிற மொழிப் பெயர்கள் கலவாத நடையில் எழுதப்படல் வேண்டும்.
2. கதையின் இரண்டு படிகளை அனுப்ப வேண்டும். ஒரு படியில் மட்டும் பெயர், முகவரிகளைத் தனித் தாளில் இணைத்து அனுப்புக. கதையின் எந்தப் பக்கத்திலும் எழுதியவர் பெயர் இருக்கக் கூடாது.
3. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா.
4. தேர்தெடுக்கப்பட்ட கதைகள்‘வெல்லும் தூய தமிழ்'மாத இதழில் வெளியிடப்படும். விருப்பம் உள்ளவர்கள் அதற்கான விலை ரூ. 20.00 இணைத்து அனுப்பவேண்டும்
5. நடுவர் தீர்ப்பே இறுதியானது .
6. சிறுகதைப் படைப்பாளர் உறுதிமொழி இணைக்க வேண்டும்
பொறிஞர் இரா.தேவதாசு இந்தாண்டு பரிசுகளை வழங்கவுள்ளார்.
இரண்டு முதற் பரிசுகள் 750.00 = 1500
இரண்டு இரண்டாம் பரிசுகள் 500.00 = 1000
இரண்டு மூன்றாம் பரிசுகள் 250.00 = 500
இத்தகவல்களைத் தனித் தமிழ் இயக்கத் தலைவர் க.தமிழமல்லன் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications