காவிரி: மத்திய அரசுக்கு எதிராக 6-வது நாளாகத் தொடர் போராட்டம் - தஞ்சையில் மாணவர்கள் சாலை மறியல்
காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திவருகின்றனர்.
Recommended Video

தஞ்சாவூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து 6-வது நாளாகத் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தஞ்சாவூர் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றன.

நாளுக்கு நாள் மத்திய அரசுக்கான எதிர்ப்பு தமிழகத்தில் வலுத்து வருகிறது. இந்நிலையில், 6-வது நாளான இன்று தஞ்சாவூர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் சரபோஜி கல்லூரி வாசலிலும், 300கும் மேற்பட்ட மாணவர்கள் தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் மற்றும் கல்லணை கால்வாய் பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று முழக்கம் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவியரை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்ததை அடுத்து, மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மதுராந்தகத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள் காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications