ஆம்பூரில் வீட்டுக்குள் டேங்கர் லாரி புகுந்து ஒருவர் பலி: 3 பேர் காயம்
ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அதிகாலை நேரத்தில் டேங்கர் லாரி வீட்டுக்குள் புகுந்து கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
ஆம்பூர் டவுன் அண்ணாநகரை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 40) கூலி தொழிலாளி. இவரின் வீடு தேசிய நெடுஞ்சாலையை யொட்டி உள்ளது. நேற்று இரவு கருணாகரன், இவரது மனைவி முனியம்மாள் (35), மகன் வெங்கடேசன் (17), உறவினர் முரளி ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்ற டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்து. அதிகாலை 4.30 மணிக்கு டிரைவர் கட்டுபாட்டை இழந்த லாரி கருணாகரன் வீட்டின் உள்ளே புகுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி வீட்டில் இருந்தோர் கதறினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கருணாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.
மேலும் படுகாயம் அடைந்த முனியம்மாள், வெங்கடேசன், முரளி ஆகியோர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் டவுன் போலீசார் கருணாகரனின் பிணத்தை சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications