அதிமுகவுக்கு வாங்கு வங்கியாக மாறிய 'டாஸ்மாக் பயம்'
சென்னை: தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கு குடிப்பழக்கம் உள்ள நிலையில் பிற கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்தி டாஸ்மாக்கிற்கு மூடுவிழா நடத்திவிடுவார்களோ என்ற பயம் அதிமுகவுக்கு கை கொடுத்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தன. ஆனால் அதிமுகவோ படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறியது.

இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
அதிமுக
அதிமுக அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. அதனால் அதிமுகவினர் தற்போதே வெற்றிக் கொண்டாட்டங்களை துவங்கிவிட்டனர்.
டாஸ்மாக்
தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கு குடிப்பழக்கம் உள்ளது. தெருவுக்கு தெரு டாஸ்மாக்கில் குறைந்த விலையில் மது வாங்கி குடித்து பழகிவிட்ட அவர்களுக்கு வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்து டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் என்ன செய்வது என்ற பயம்.

மது
டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் அல்லாட வேண்டும் என்ற பயமும் அதிமுகவுக்கு வாக்கு வங்கியாக மாறியுள்ளது. மேலும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற பயமும் அதிமுகவுக்கு கை கொடுத்துள்ளது.
கருத்துக்கணிப்பு
நியூஸ்7 சேனல் மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட மக்களில் 30 சதவீதம் பேர் மதுவிலக்கு வேண்டாம் என்று தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications