அரசு மதுபான கடையில் இருந்து தனியார் பாருக்கு மது பாட்டில் கடத்தல்.. கார் பறிமுதல்.. ஒருவர் கைது
டாஸ்மாக்கில் இருந்து தனியார் பாருக்கு மது பாட்டில் கடத்தப்பட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கோட்டை:அரசு மதுபான கடையான டாஸ்மாக்கில் இருந்து தனியார் பாருக்கு மது பாட்டில்கள் கடத்தப்பட்டதில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை வல்லம் ரோட்டில் அரசு மதுபானக் கடை
ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்தக் கடையை அடைக்கும் போது சிலர் மொத்தமாக மதுப் பாட்டில்களை வாங்குவதாக செங்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, காவல் துணை ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது, வழக்கறிஞர் என்ற அடையாள சின்னமிட்ட ஒரு அம்பாசிடர் கார் வேகமாக வருவதை பார்த்த போலீசார் அதனை மறித்துள்ளனர். இதனை சற்று எதிர்பார்க்காத காரில் வந்த இருவர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து காரை சோதனையிட்ட போலீசார் காரினுள் இருந்த மனோஜ் குமார் என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் காரில் 97 குவார்ட்டர் பாட்டில்களை பிரானூர் பார்டரில் உள்ள தனியார் பாருக்கு வாங்கி செல்வதாக மனோஜ் குமார் தெரிவித்தார். மேலும், காரில் இருந்து தப்பி ஓடியவர்கள் செங்கோட்டை பிரானூர் பார்டரில் தனியார் பார் நடத்தி வரும் செங்கோட்டையை சார்ந்த சேகர் என்பதும், மற்றொருவர் கரிசல் குடியிருப்பு முருகன் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
மதுப்பாட்டில்களையும்,காரையும் பறிமுதல் செய்த போலீசார் மனோஜ்குமாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications