மச்சி ஓபன் தி பாட்டில்.. "கடை" திறப்பால் மீண்டும் "சியர்ஸ்" ஆன ஆர்.கே.நகர் குடிகாரர்கள்!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தலையொட்டி மூடப்பட்டிருந்த மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் குடிகாரர்கள் உற்சாகமாக கடைகளில் குவிய ஆரம்பித்துள்ளனர்.
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு நாளை (12ம் தேதி) இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தேர்தலை ரத்து செய்து விட்டது தேர்தல் ஆணையம்.
இந்தத் தேர்தலால் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்ட மதுப் பிரியர்கள்தான் கொஞ்சம் "கஷ்டப்பட்டு"ப் போய் விட்டனர்.

அடுத்தடுத்து கடை மூடல்
9ம் தேதி மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. எனவே அன்று கடைகள் மூடப்பட்டிருந்தன.

தேர்தலுக்காக லீவு
அடுத்து 10ம் தேதி அதாவது நேற்று பிரசாரம் ஓய்வதாக இருந்தது. இதையடுத்து நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை தினமான ஏப்ரல் 15ம் தேதி வரை கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனால் குடிகாரர்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர்.

தேர்தல் ரத்தால் குஷி
இதனால் 8ம் தேதி இரவே பெரும்பாலானோர் கடைகளில் குவிந்து சரக்குகளை வாங்கிக் குவித்தனர். ஆனால் தற்போது தேர்தல் ரத்தாகி விட்டதால் அவர்கள் குஷியாகி விட்டனர்.

மீண்டும் கடைகளில் கூட்டம்
நேற்று முதல் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டதால் குடிகாரர்கள் கூட்டம் கடைகளில் மீண்டும் அலை மோதுகிறது. பலர் தேர்தல் ஆணையத்துக்கு சியர்ஸ் சொல்லிக் குடித்த கண்றாவியையும் பார்க்க முடிந்தது.
என்னவோ போடா மாதவா!
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications