பாதுகாப்பு கோரி டாஸ்மாக் ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்.. அரசுக்கு எச்சரிக்கை
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான டாஸ்மாக் ஊழியர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் மதுக் கடைகளை மூடக் கோரி போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஆங்காங்கு கடைகள் மீது தாக்குதலும் நடைபெறுகிறது. சேலத்தில் நடந்த தாக்குதலில் உயிரோடு ஒரு ஊழியர் எரித்துக் கொல்லப்பட்டார்.

அதேபோல சென்னை தி.நகரில் ஒரு டாஸ்மாக் கடை தீவைத்து எரிக்கப்பட்டதால் டாஸ்மாக் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து இன்று சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

மேலும் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும். ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்

போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு பெருமளவில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
-
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
திருச்சி தனியார் மதுக்கடைகளில் டாஸ்மாக் 10 ரூபாய் ஸ்டிக்கர்? துணை சபாநாயகர் ஆய்வில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications