குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 30 மாணவிகளிடம் உல்லாசம்.. டியூசன் ஆசிரியர்கள் 3 பேர் கைது !
தருமபுரியில் 30 மாணவிகளை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருந்து அதை வீடியோவில் பதிவு செய்து வைத்திருந்த டியூசன் ஆசிரியர் 3 பேர் கைது
தருமபுரி: தருமபுரியில் டியூசன் படிக்க வரும் மாணவிகள் சிலரை மயக்கி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தாக டியூசன் சென்டர் நடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார்(25), ஈஸ்வரன் (26), மற்றொரு சிவக்குமார் (27) ஆகியோர் சேர்ந்து தருமபுரி நெசவாளர் காலனி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக டியூசன் சென்டர் நடத்தி வந்தனர். இந்த டியூசன் சென்டரில் 10 முதல் 12 -ம் வகுப்பு வரை படிக்கும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் டியூசனுக்கு வரும் மாணவிகள் சிலரிடம் மயக்க மருந்து கொடுத்து சிவக்குமார் உள்பட சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல்கள் வெளியானது. இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் டியூசன் சென்டருக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், டியூசன் சென்டர் நடத்திய சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து பாலக்கோடு, தருமபுரி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக டியூசன் சென்டர் நடத்தி வருவது தெரியவந்தது.
மேலும் டியூசன் படிக்க வரும் மாணவிகளில் சிலருக்கு தனியாக அதிக நேரம் பாடம் சொல்லி கொடுப்பது போல நாடகம் ஆடியுள்ளார் சிவக்குமார். அப்போது சில மாணவிகளுக்கு குளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவிகள் மயங்கி விழுந்ததும் அவர்களிடம் உல்லாசம் அனுபவித்துள்ளார். அதனை செல்போன்களில் வீடியோவாக படம் பிடித்து தனது நண்பர்களான ஈஸ்வரன் மற்றும் மற்றொரு சிவக்குமாருக்கும் அதனை காட்டியுள்ளார். அவர்கள் 2 பேரும் அந்த ஆபாச வீடியோவை மாணவிகளுடன் காட்டி மிரட்டி தாங்களும் மாணவிகளுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதில் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதுவரை 30-க்கும் மேற்பட்ட மாணவிகளை ஆசிரியர்கள் என்ற போர்வையில் அவர்கள் சீரழித்துள்ளனர். இந்த கொடுர சம்பவம் கடந்த 2 வருடங்களுக்கும் மேல் அங்கு நடந்துள்ளது தான் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கிடையே டியூசனில் படித்த ஒரு மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறியதால் அவர்கள் பாலக்கோடு போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையிலே இந்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதையடுத்து டியூசன் நடத்தி வந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications