10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்… ஆசிரியர் கைது
சென்னை: 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 40 வயது ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து யூனியன் உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆசிரியராக பணி புரிந்து வருகிறார் 40 வயதான சீனிவாசன்.

கடந்த 20ம் தேதி, வகுப்பறையில் இருந்து சிறுமியை மட்டும் தனியாக அழைத்துச் சென்ற சீனிவாசன் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். மேலும், இதை வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டி அனுப்பியுள்ளார். இதனால் சிறுமி தன்னுடன் படிப்பவர்களிடமும், பெற்றோர்களிடமும் இந்த விஷயத்தை சொல்லாமல் மூடி மறைத்து வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை சிறுமி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். பதற்றமடைந்த பெற்றோர் அருகில் உள்ள மருத்துவரிடம் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளதை உறுதிபடுத்தினர். அதிர்ந்து போன பெற்றோர், இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
பெற்றோர்களின் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆசிரியர் சீனிவாசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications