ஒருவேள இதுவும் அப்படி இருக்குமோ.. திருமணம் நிச்சயிக்கப்பட்ட, தமிழ் ஆசிரியை ஆதார் கார்டுடன் மாயம்!
திருச்சி: திருமணம் நிச்சயமான நிலையில், திருச்சி மாவட்ட பள்ளி ஆசிரியை தனது காதலனுடன் திடீரென ஓட்டம் பிடித்துவிட்டார்.
திருச்சி, மாவட்டம் முத்தரசநல்லூர் அருகே உள்ள காவேரி நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை மகள் புனிதா (24). இவர் சோமரசம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
தினமும் தனது வீட்டில் இருந்து பள்ளி வேனில் பணிக்கு செல்வது வழக்கம். நேற்றும் அதேபோல் காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து பள்ளி வேனில் புனிதா புறப்பட்டார். ஆனால் அவர் பாதி வழியிலேயே வேனில் இருந்து இறங்கியுள்ளார்.
மாலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் பள்ளிக்கு தொலைபேசியில் விசாரித்துள்ளனர். அப்போதுதான் புனிதா பள்ளிக்கு செல்லாதது தெரிய வந்தது.
புனிதாவின் செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளது.
இதற்கிடையே நேற்று காலை பணிக்கு சென்ற புனிதா வீட்டில் இருந்த அவரது ஆதார் அட்டை, மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றையும் எடுத்து சென்றுள்ளார்.
இதுதொடர்பாக அவரது பெற்றோர் இன்று காலை ஜீயபுரம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாயமான ஆசிரியை புனிதா ஏற்கனவே ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அவரது பெற்றோர் அந்த வாலிபருடனேயே திருமணம் செய்துவைக்க சம்மதித்து உள்ளனர். வருகிற ஜூன் மாதம் அவர்களது திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் ஆசிரியை புனிதா மாயமாகி உள்ளார்.
கோடை விடுமுறை தொடங்கியுள்ள இந்த நேரத்தில், ஆசிரியைகள் திடீரென காதலர்களுடன் மாயமாகும் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications