கணக்கு வாத்தியாரின் “கொள்ளை” கணக்கு – பெண்ணை கிரிக்கெட் பேட்டால் அடித்து நகை கொள்ளை
திருப்பூர்: திருப்பூரில் வீட்டிலிருந்த கிரிக்கெட் மட்டையால் அடித்து பெண் ஒருவரிடம் நகை கொள்ளையடித்த கணக்கு ஆசிரியர் உட்பட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கயத்திலுள்ள முல்லை நகரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவர் மனைவி சுபிதா.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதியம் 12 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த சுபிதாவின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, கிரிக்கெட் பேட்டால் தலையில் அடித்து போட்டுவிட்டு அவரது கழுத்திலிருந்த 5 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காங்கயம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரனை மேற்கொண்டனர். அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்ததில், சம்பவம் நடந்த நேரத்தில், அங்கு வந்ததாக கூறிய இரு நபர்களில் காங்கயத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கணக்கு ஆசிரியராக பணியாற்றிய, மொடக்குறிச்சியை சேர்ந்த இளங்கோவன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட இளங்கோவன் அவல்பூந்துறையை சேர்ந்த தேவராஜ் என்ற நண்பருடன் சேர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இளங்கோவன், காங்கயம் பள்ளியில் வேலை செய்த அறிமுகத்தைக் கொண்டு அங்கு வசிக்கும் நபர்கள் குறித்து விவரங்களை சேகரித்துள்ளார்.
அதன் மூலம் பகல் நேரங்களில் சுபிதா மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட இளங்கோவன் தனது நண்பருடன் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
திருப்பூரில் தங்கி அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த தேவராஜூவையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற நகையை பறிமுதல் செய்தனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications