Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருட்டுப் போனது 100 பவுன்.. 80 என்று எப்ஐஆர் போட்ட போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது வீட்டில் நடந்த கொள்ளையை விட போலீஸார் நடந்து கொண்ட முறையால் அதிர்ச்சி அடைந்துள்ளார் சென்னை ஆசிரியை ஒருவர்.

சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாவனா. இவரது வீட்டில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் ரூ. 1 லட்சம் பணத்தையும் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

Teacher's house looted in Chennai

இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் பாவனா. அதில், தான் தனது தயார் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய நேரத்தில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. மொத்தம் 100 சவரன் தங்க நகை கொள்ளை போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் பாவனாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் முதல் தகவல் அறி்க்கையில் 80 பவுன் நகைகள் கொள்ளை போனதாக பதிவு செய்துள்ளனராம் போலீஸார். நகையைப் பறி கொடுத்தவர்கள் கூறிய எண்ணிக்கையை விட்டு போலீஸார் அவர்கள் இஷ்டத்திற்கு ஒரு நம்பரைப் போட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+