Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கால்நடை மருத்துவரின் கசமுசா உறவு + அநாகரீக மிரட்டல்... ஆசிரியை மனைவி பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

சேலம்: கால்நடை மருத்துவரான எனது கணவர் தனது நண்பரின் மனைவியுடன் தகாத உறவை ஏற்படுத்திக் கொண்டு என்னை விவாகரத்து செய்து விடுமாறு கூறி மிரட்டுகிறார். இதற்கு நான் சம்மதிக்காவிட்டால் எங்களது முதலிரவின்போது எடுத்த படத்தையும், அந்தரங்கமாக பேசியதையும் வெளியிட்டு விடுவதாக மிரட்டுகிறார் என்று கூறி சேலம் போலீஸில் ஒரு ஆசிரியை புகார் கொடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தொளசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் டாக்டர் அண்ணாதுரை (35). சேலம் மாவட்டம் கருமந்துறையில் இவர் அரசு கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). எம்.காம் படித்துள்ள இவர் ஆசிரியையாக இருந்து வருகிறார்.

Teacher slams charges against her doctor husband

ஆனந்திக்கும், அண்ணாதுரைக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. 3 நாட்கள் மட்டுமே கணவருடன் குடும்பம் நடத்தினார் ஜெயந்தி. அதன் பிறகு பயிற்சிக்குப் போவதாக போன அண்ணாதுரை அதன் பிறகு திரும்பி வரவே இல்லை.

இது குறித்து ஆனந்தி செல்போனில் தொடர்புகொண்டு கணவரிடம் கேட்ட போது நான் பணிபுரியும் இடத்தில் வாடகை வீடு கிடைக்கவில்லை. வீடு பார்த்து விட்டு வந்து அழைத்து செல்வதாக கூறினார். ஆனால் வரவும் இல்லை. பேசவும் இல்லை.

இந்த நிலையில் திடீரென ஆனந்திக்கு போன் செய்த அண்ணாதுரை, உன்னுடைய பெற்றோர்களிடம் இருந்து ரூ. 25 லட்சம் பணம் வாங்கி வர வேண்டும். அப்போதுதான் உன்னுடன் குடும்பம் நடுத்துவேன். பணம் வாங்கிவர முடியவில்லை என்றால், எனக்கு விவாரத்து கொடுத்துவிடவேண்டும்.

இல்லையானால், நாம் முதலிரவில் எடுத்த படத்தையும், நீயும் நானும் ஆபாசமாக பேசியவைகளையும் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தி ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.

அதில், எங்களுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகிறது. கணவருடன் 3 நாட்கள் மட்டுமே குடும்பம் நடத்தினேன். அதன் பிறகு, அவர் என்னை அழைத்து செல்லவில்லை. குடும்பம் நடத்த அழைத்து செல்லுங்கள் என்று நான் போனில் அவருடன் பேசினால் அவர் பணம் வாங்கி வா என்று மிரட்டுகிறார். மேலும் எனது அப்பா- அம்மாவிடம் வரதட்சணையாக பெரிய தொகையை பறிக்க அவர் திட்டம் தீட்டி உள்ளார். என்னிடம் 25 லட்சம் பணம் வரதட்சணையாக வாங்கி வர வேண்டும் என்று மிரட்டுகிறார்.

எனது கனவர் அண்ணாதுரையுடன் படித்த டாக்டர் நண்பர் திடீரென இறந்து விட்டார். அவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். எனது கணவர் அந்த பெண்ணுக்கு ஆதரவாக இருப்பதாக கூறிக் கொண்டு அவருடன் தவறான உறவை ஏற்படுத்தி கொண்டு என்னை கொடுமைப்படுத்துகிறார். என்னை செக்ஸ் டார்ச்சர் செய்து வரதட்சணை கேட்டு துன்புறுத்துகிறார். எனவே எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆனந்தி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஓமலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+