கோரிக்கையை ஏற்காவிட்டால் நவம்பர் முதல் காலவரையற்ற ஸ்டிரைக்.. ஆசிரியர்கள் எச்சரிக்கை
சென்னை: எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நவம்பர் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஆசிரியர் கூட்டமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அனைத்துப் பள்ளிகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்பதும் ஆசிரியர்களின் கோரிக்கையாகும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு பள்ளி ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ அமைப்பின் உயர்மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யப்பட வேண்டும், அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்பதும் ஆசிரியர்களின் கோரிக்கையாகும்.

3 லட்சம் ஆசிரியர்கள்
இன்று நடைபெறும் போராட்டத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தொடங்கி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் என சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் ஆர்பாட்டம்
சென்னையில் ஜாக்டோ சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் ஜாக்டோ அமைப்பை சேர்ந்த சத்திய ராஜன், லிங்கேசன் ஆகியோர் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர் ஆசிரியைகள் பங்கேற்றனர். திரண்டனர். அங்கு அரசை கண்டித்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்

எட்டு மாதகால போராட்டம்
போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோவின் உயர்மட்ட குழு உறுப்பினர் எஸ்.சங்கர பெருமாள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 மாதமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வகுப்பு புறக்கணிப்பு
இந்த ஒருநாள் வேலை நிறுத்தத்தை அறிவித்த போதிலும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் 1 முதல் 12 வரையிலான வகுப்புகளை சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளிகளை மூடிவிட்டு போராட்டத்தில் இறங்கினர்.

நவம்பரில் போராட்டம் தொடரும்
பெரும்பான்மையான ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் வகுப்புகள் நடைபெறவில்லை. நவம்பர் 2வது வாரத்துக்குள் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் நவம்பர் இறுதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.

சிறப்பு வகுப்பு நடத்துவோம்
எங்களது போராட்டத்தினால் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி சரி செய்வோம். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வாசுதேவன், சொர்ண லதா, உதயகுமார், எஸ். காயத்தாறு, கண்ணபிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications