படிக்கும் போது மாணவர்களுக்கு போராட்டங்கள் எதற்கு?- ஆசிரியர்கள் அறிவுரை கூற உத்தரவு!
சென்னை: மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்பதை அவர்களின் மனதில் பதிய வைத்து அறிவுரை வழங்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "மதுக்கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்களும் கலந்து கொள்கின்றனர் என்று தினமும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. இது மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

மாணவர்கள் பள்ளிப்பருவத்தில் தங்கள் கவனத்தை படிப்பில் மட்டுமே செலுத்தி முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும். அவர்களின் கவனம் வேறு எதிலும் சிதறாத வகையில் பாதுகாக்க வேண்டியது பெற்றோர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களையே சாரும்.
மாணவர்களை வற்புறுத்தி போராட்டங்களில் ஈடுபடச் சொன்னாலும் அவர்கள் அதில் ஈடுபடக்கூடாது. கல்வி நலன் மற்றும் தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தின்போதும், வகுப்பு ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் நேரங்களிலும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்பதை அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications