ஆர்.கே.நகரில் ஓபிஎஸ் அதிமுக வேட்பாளராக மதுசூதனன்? அதிரடி வியூகம்!
ஆர்கே நகரில் ஓபிஎஸ் அதிமுக வேட்பாளராக மதுசூதனனை நிறுத்த அதிரடி வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அதிமுக வேட்பாளராக மதுசூதன் போட்டியிடக் கூடும் என தெரிகிறது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் ஏப்ரல் 15-ந் தேதி எண்ணப்படுகின்றன.

தீபா போட்டி
இத்தொகுதியில் எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவையின் பொதுச்செயலர் தீபா போட்டியிட உள்ளார். திமுக சார்பில் போட்டியிடுவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
மதுசூதனன்
ஓபிஎஸ் அதிமுக, சசிகலா அதிமுகவும் போட்டியிடுவது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. ஓபிஎஸ் அணியைப் பொறுத்தவரையில் வெற்றி பெற்று தாங்களே உண்மையான அதிமுக என நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
தனிப்பட்ட செல்வாக்கு
ஆர்.கே.நகர் தொகுதியைப் பொறுத்தவரையில் மதுசூதனனுக்கு கணிசமான தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறதாம். ஏற்கனவே இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றியை அறுவடை செய்தவர் மதுசூதனன்.
இதனால் மதுசூதனனை நிறுத்தி வெற்றி பெற வைப்பது என்பது ஓபிஎஸ் அணியின் வியூகமாகும். மதுசூதனை நிறுத்தப்பட்டால் சேகர் பாபு போன்ற ஒரு வலுவான வேட்பாளரைத்தான் திமுக நிறுத்த வேண்டிய நிலை வரும். அத்துடன் இருவரும் உறவினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications