தந்தையின் மருத்துவ செலவுக்கு பணமில்லை - தாய், தங்கையை கொன்று இளைஞர் தற்கொலை
தந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தாய், சகோதாியை கொலை செய்துவிட்டு மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திண்டிவனத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்: திண்டிவனத்தில் தந்தையின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத விரக்தியில் தாய், தங்கையை கொலை செய்து விட்டு மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தாய், சகோதாியை கொலை செய்துவிட்டு மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

திண்டிவனம் ரோஷணை பகுதியில் உள்ள கெங்கைஅம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜாராம், வயது 46. இவர் கடலூர் போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சுமதி,40 என்ற மனைவியும், ரஞ்சித்,25 என்ற மகனும், வித்யபிரியா,24 என்ற மகளும் உள்ளனர்.
ரஞ்சித், வித்யபிரியா இருவரும் 12ம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலையின்றி வீட்டிலேயே இருந்துள்ளனர்.
சமீபத்தில் ராஜாராமுக்கு உடலநலம் கடுமையாக பாதிக்கப்பட்டு பல மாதங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு கல்லீரல், சிறுநீரகம் செயலிழந்து விட்டதால் மாற்று சிறுநீரகம், கல்லீரல் பொருத்த ரூ.60 லட்சம் தேவைப்பட்டது. இதனால் மனைவி, மகன், மகள் மூன்று பேரும் சில மாதங்களாக மனவேதனையுடன் அக்கம் பக்கத்தில் யாருடனும் பேசாமல் தொடர்பின்றி தனித்து இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை முதல் நீண்ட நேரமாக சுமதியின் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் ரோஷணை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை திறக்க முயன்றனர். ஆனால், கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
அங்கு சுமதி மற்றும் வித்யபிரியா இருவரும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். வித்யபிரியாவுக்கு முகம் எரிந்து நிலையில் இருந்தது. ரஞ்சித் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு இறந்து கிடந்தார்.
வீட்டில் சோதனை நடத்திய போலீசார் ரஞ்சித் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் தந்தைக்கு மருத்துவ சிகிச்சை செய்ய எங்களால் பண உதவி செய்ய முடியவில்லை. இதனால் 3 பேரும் தற்கொலை செய்து கொள்கிறோம் என எழுதப்பட்டிருந்தது.
மூவரின் உடல்களையும் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
தகவலின் பேரில், அங்கு வந்த எஸ்பி ஜெயகுமார், டிஎஸ்பி திருமால் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே 3 பேரின் இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜாராமனின் மகன் ரஞ்சித்குமாா் நிதானம் இழக்க தாயாா் மற்றும் சகோதாியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாா். இந்த சம்பவம் தொடா்பாக காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications