14 வயதிலேயே பலாத்காரம்.. காப்பகம் போய் திரும்பி வந்து மீண்டும் அதே குற்றமிழைத்த 17 வயது சிறுவன்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை போலீஸார் பலாத்கார வழக்கில் கைது செய்துள்ளனர்.
இந்த சிறுவன் ஏற்னவே தனது 14 வயதில் 24 வயதுப் பெண்ணைப் பலாத்காரம் செய்து பரபரப்பை ஏற்படுத்திக் கைதாகி சிறுவர் சிறைக்குச் சென்று தண்டனை அனுபவித்தவன்.

3 ஆண்டு தண்டனை (சிறார்களுக்கு அதிகபட்ச தண்டனையே அவ்வளவுதான் - கொலையே செய்தாலும் கூட) முடிந்து திரும்பி வந்த அவன் தற்போது 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து மீண்டும் சிக்கியுள்ளான். இந்த சம்பவம் சூளகிரியை அதிர வைத்துள்ளது.
திங்கள்கிழமை மாலை இந்த பலாத்கார சம்பவம் நடந்துள்ளது. இந்த அக்கிரமத்துக்கு ஆளான சிறுமி, குண்டு குருக்கி என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் ஆவார். அந்த சிறுமி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை நைச்சியமாக பேசி தனியான இடத்திற்குக் கூட்டிச் சென்று சீரழித்து விட்டான் இந்த சிறுவன்.
அப்போது அந்த சிறுமி கத்தியபோது கத்தினால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். இருப்பினும் அச்சிறுமி அதையும் மீறி கத்தியுள்ளார். சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த, சிறுவன் தப்பிஓடி விட்டான்.
நடந்ததை அறிந்து அதிர்ந்து போன பெற்றோர் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து இன்று அவனைக் கைது செய்தனர்.
ஓசூரில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் சிறுவனை சேலம் சிறார் காப்பகத்தில் கொண்டு போய் அடைத்தனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications