கோயில் திருவிழாவில் வாங்கி சாப்பிட்ட அவல் பிரசாதத்தால் விபரீதம்... 2 பெண்கள் பலி!
கோவை அருகே கோயில் திருவிழாவில் விநியோகிக்கப்பட்ட அவல் பிரசாதத்தை உண்ட 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் முத்துமாரியம்மன் கோயிலில் அவல் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று கோயில் திருவிழாவில் விநியோகம் செய்யப்பட்ட அவல் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கோவை, மேட்டுப்பாளையம் நாடார் காலனி ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோயிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில், பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சுவாமி தரிசனத்திற்கு வந்த மக்கள் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

ஆனால் கோயிலில் வழங்கப்பட்ட அவல் பிரசாதம் பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு பிரசாதம் சாப்பிட்ட 2 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேருக்கு வாந்தி உள்ளிட்ட உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 60 வயது லோகநாயகி மற்றும் சாவித்ரி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications