3000 அடி உயரத்திலிருந்து பக்தர் விழுந்து பலி எதிரொலி... தலைமலை கோயிலுக்கு தற்காலிக வேலி
திருச்சி அருகே தலைமலை கோயிலில் 3000 அடி உயரத்திலிருந்து பக்தர் ஒருவர் விழுந்ததை அடுத்து அந்த கோயிலுக்கு தற்காலிக வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருச்சி: தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயிலில் 3000 அடி உயரத்திலிருந்து பக்தர் ஒருவர் விழுந்ததை அடுத்து அந்த கோயிலுக்கு தற்காலிக வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அகண்ட காவிரியின் வடகரையில் நீர்வளம், நிலவளம் பொருந்திய தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயில் மிக பழமையும், தொன்மையும் வாய்ந்த சிறப்பு பெற்ற வைணவ கோயிலாகும். கடந்த புரட்டாசி கடைசி சனிக்கிழமை அன்று ஏராளமான பக்தர்கள் காலை முதலே கிரிவலம் வந்திருந்தனர்.

Recommended Video

அப்போது கிரிவலம் வந்த இளைஞர் ஒருவர் 3000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார். போலீஸ் விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் ஆறுமுகம் என்றும் திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லாததால் குழந்தை வரம் வேண்டி கிரிவலம் வந்ததும் தெரியவந்தது.
அந்த இளைஞர் 600 அடி பள்ளத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து ஆபத்தான அந்த கோயில் சுவற்றில் கிரிவலம் வர தடை விதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்படி சஞ்சீவராய பெருமாள் கோயில் சுவற்றில் கிரிவலம் செல்வது ஆபத்தானது என்றும் இது ஆபத்தான பகுதி என்றும் எருமைப்பட்டி போலீஸார் சார்பில் எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த கோயிலுக்கு முதற்கட்டமாக இரும்பு கம்பி வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் நிரந்தரமாக வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications