தென்காசியில் இனோவா காரில்.. டெயிலர் கமலியுடன் 2 நாள் ரவுண்டு அடித்த கணவர்.. மாட்டிக்கிட்டது இப்படித்தான்
தென்காசி: தென்காசியில் மனைவியை எரித்து கொன்ற கணவர் கைதாகி உள்ளார்.. மனைவியை கொன்றதற்கான காரணம் குறித்து போலீசில் விவரித்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
தென்காசி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு முன்பு, உடல் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.. அதாவது, தென்காசியை அடுத்த இலத்தூரில் மதினாப்பேரியில் பாழடைந்த குளம் உள்ளது.

இந்த பகுதி அருகே மனித உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக இலத்தூர் போலீஸாருக்கு தகவல் கிடைக்கவும், விரைந்து வந்த இலத்தூர் போலீஸார், சம்பவ இடத்தில் எரிந்த நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போதுதான், எரிந்து பிணமாக கிடந்தவர் பெண் என்பது தெரியவந்தது.. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், உடல் கைப்பற்றப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பாழடைந்த குளமும், மதுபாட்டில்களும்
இறந்த நபர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? எதற்காக கொல்லப்பட்டார்? என்ற விசாரணையை மேற்கொண்டனர். சடலம் கிடந்த இடத்தில் சில மதுபாட்டில்களும் கிடந்ததால், யாராவது பெண்ணை கடத்தி வந்து கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது. ஆனால், எந்த க்ளுவும் கிடைக்கவில்லை. அந்த பகுதியில் யாராவது பெண்கள் மாயமானதாக புகார் பதிவாகியிருக்கிறதா என்று ஆராய்ந்தனர். அப்படி எந்த புகாரும் பதிவாகவில்லை என தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்... அத்துடன், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைபற்றி போலீஸார் ஆய்வு செய்தனர்.
அப்போதுதான், சம்பவத்தன்று, சந்தேகப்படும்படி இனோவா கார் ஒன்று அந்த பகுதியிலேயே சுற்றி சுற்றி வந்தது பதிவாகியிருந்தது.. பாழடைந்த குளம் இருந்த மட்டுமல்லாமல், அந்த பகுதியிலுள்ள எல்லா சிசிடிவி காட்சிகளிலும் இந்த கார் பதிவாகியிருந்தது. இதுதான் போலீசுக்கு மிகப்பெரிய க்ளூவாக கிடைத்திருக்கிறது. எனவே, அந்த காரின் பதிவெண்ணை வைத்து தனிப்படையினர் விசாரிக்கத் தொடங்கினர்.
இனோவா கார் யாருடையது
போலீஸின் இந்த விசாரணையில், அந்த கார் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த தங்க திருப்பதி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. எனவே, சிவகாசி விரைந்த தனிப்படையினர், தங்க திருப்பதியைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, தன்னுடைய நண்பர் கில்பர்ட் ஜான் என்பவர்தான். காரை கடந்த 2 நாட்களாக பயன்படுத்தி வருவதாக சொல்லி உள்ளார்.. இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் கில்பர்ட் ஜானை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போதுதான், அதிர்ச்சிகரமான தகவல்கள் அவர் சொன்னார்.. ஜான் கில்பர்ட் ஒரு பெயிண்ட்டர்.. அதே பகுதியில் டெய்லராக வேலை பார்த்து வந்த கமலி என்ற பெண்ணைக் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. ஆனால், கமலிக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையறிந்து, கில்பர்ட் ஜான் தனது மனைவி கமலியை கண்டித்துள்ளார். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
பிளாஸ்டிக் பைப் - இரும்பு கம்பி
அப்படித்தான், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்றும், கணவன்-மனைவிக்கு சண்டை வந்துள்ளது.. இதனால், கோபமடைந்த கமலி, கீழே கிடந்த பிளாஸ்டிக் பைப்பால், ஜான் கில்பர்ட்டை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கில்பர்ட், அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து மனைவி கமலியின் தலையிலேயே அடித்துள்ளார். இதில் கமலி ரத்த வெள்ளத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளதாக தெரிகிறது.
இதற்கு பிறகுதான், போலீஸூக்கு பயந்து, சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துள்ளார்.. உடனே தன்னுடைய நண்பரான தங்க திருப்பதியிடம், அவசரத்துக்கு கார் வேண்டும் என்று வாங்கிக்கொண்டு, காரின் பின்புறத்தில் கமலியின் சடலத்தை எடுத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறார்.
அப்போதுகூட, சடலத்தை எங்கே போடுவது என்று தெரியாமல், மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாகத் தென்காசி வந்துள்ளார்.. சடலத்தை தூக்கி எறிவதற்கான இடம் எதுவுமே கிடைக்கவில்லையாம்..
காரிலேயே சடலத்துடன் 2 நாள்
இப்படியே குற்றாலம், தென்காசி, ஆயக்குடி, செங்கோட்டை என்று காரில் சுற்றி சுற்றி வந்திருக்கிறார். 2 நாளுமே சடலத்துடன் காரில் சுற்றியிருக்கிறார் ஜான் கில்பர்ட்.. இறுதியாக இலத்தூர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத குளத்தை பார்த்தவுடனே, அங்கு வைத்து கமலியின் உடலை எரித்துள்ளார். கமலியின் சடலம் முழுவதுமாக எரிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டு, கிளம்பிவிட்டார்.
ஆனால், அந்த சடலம் முழுமையாக எரியாமல் இருந்து, அந்த பகுதி மக்களின் கண்ணிலும் பட்டுள்ளது.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, ஜான்கில்பர்ட்டை போலீஸார் கைது செய்தனர்.. அத்துடன், கொலைக்கு உதவியதற்காக தங்க திருப்பதியையும் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய இன்னோவா காரையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications