தென்காசி, விழுப்புரம், கன்னியாகுமரிக்கு உள்ளுர் விடுமுறை! இன்று ஐயா வைகுண்டரின் 193வது அவதார தினவிழா
தென்காசி: தமிழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 3 மாவட்டங்களுக்கு அனைத்துப் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று மார்ச் 4ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் மார்ச் 15ம் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார்.
அதேபோல, இன்று மார்ச் 4ம் தேதி தென்காசி மாவட்டத்தில் அய்யா வைகுண்ட சாமியின் 193வது அவதாரத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 15ம் தேதி வேலை நாளாகவும் அறிவித்து தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் இன்று மார்ச் 4-ம் தேதி அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழாவும், 11-ம் தேதி மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக் கொடை விழாவும் நடைபெறுவதை முன்னிட்டு இந்த 3 நாட்களுக்கு குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் நிலையில் முக்கிய அரசு தேர்வுகள் திட்டமிட்டபடியே நடைபெறும் என்றும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications