தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் மரத்தில் தீ... துரிதமாக செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு!
தென்காசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள மரத்தின் உச்சியில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது .
தென்காசி: திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள மரத்தின் உச்சியில் திடீரென தீப் பிடித்து எரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து நிகழ்வுகளாக கோவில்களில் தீ விபத்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. திருவாலங்காடு கோவில் ஸ்தல விருட்சம் எரிந்தது, கும்பகோணத்தில் கற்ப கிரகத்திற்குள் தீ விபத்து ஏற்பட்டது என்று அடுத்தடுத்து நடந்த தீ விபத்துகள் பக்தர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் உள்ள புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள மரத்தின் உச்சியில் நேற்று திடீரென தீ பற்றியது. கோவில் திருவிழாவின் போது வெடிக்கப்பட்ட வானவேடிக்கைகள் மரத்தின் மீது விழுந்ததில் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது.
கோவில் மரம் தீப்பிடித்து எரிவதைக் கண்டு பக்தர்கள் பதறியடித்து ஓடி தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் தலத்தின் உள்ளே இருந்த கோவில் மரம் இத்தனை ஆண்டுகள் இல்லாமல் திடீரென தீப்பிடித்ததை பக்தர்கள் அபசகுனமாக நினைக்கின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications