தென்காசி ரயில்வே மேம்பாலம் 8ந் தேதி திறப்பு- கடை அடைப்பு போராட்டம் ரத்து!
தென்காசி: தென்காசியில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் நாளை மறுநாள் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் வர்த்தக சங்கம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த கடை அடைப்பு போராட்டம் ரத்து செய்யப்பட்டது.
தென்காசி நகரில் ரயில் வந்து செல்லும் போது ஒவ்வொரு முறையும் கேட் அடைக்கப்படும். அப்போது இரு புறமும் கார்கள் அணிவகுத்து நிற்கும். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை அடுத்து 36 கோடி ரூபாய் செலவில் சுமார் 850 மீட்டர் நீளத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் நடந்த பணிகள் முடிவடைந்த பின்னரும் நெடுஞ்சாலை துறையினர் பாலத்தை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை.
இதனால் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும், வர்த்தக நிறுவனங்களும் பாலத்தை திறக்க போராடி வந்தனர். இதில் உச்சகட்டமாக கம்யூனிஸ்ட் கட்சியினர் பாலத்தை திறந்து வைக்கவே முயன்றனர். கவுன்சிலர்கள் உள்பட பல்வேறு அமைப்பினரும் போராடி வந்த நிலையில் தென்காசி வர்த்தக சங்கம் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்து.
இதில் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் கலந்து கொள்வதாக அறிவி்த்திருந்தன. பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததால் நெடுஞ்சாலை துறை திடீரென நாளை மறுநாள் பாலத்தை திறக்க போவதாக அறிவி்த்துள்ளது. இதுகுறித்து கோட்ட பொறியாளரிடமிருந்து உறுதியான தகவல் கிடைத்ததால் வர்த்தக சங்கம் இன்று அறிவித்திருந்த கடை அடைப்பு போராட்டத்தை ரத்து செய்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications