தூத்துக்குடி பிரத்தியங்கரா தேவி சித்தர் பீடத்தில் தை மகாளய அமாவாசை யாகம்
தூத்துக்குடி:தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் தை மகாளய அமாவாசையை முன்னிட்டு மகாலெட்சுமி யாகம் நடந்தது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள அய்யனடைப்பு சித்தர்நகரில் தமிழகத்திலேயே மிக உயரமாக 11அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் மற்றும் குருபகவான், வீரபத்திரர், தட்சிணாமூர்த்திக்கு தனிசந்நிதி நிறுவப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது.

தை மகாளய அமாவாசையை முன்னிட்டு உலகஅமைதிவேண்டியும், நன்கு மழைபெய்து பசுமைவளம் சிறக்க வேண்டியும், அனைத்து மக்களும் நலமாக வாழவேண்டியும் ஆலயத்தில் இன்று மகாலெட்சுமி யாகம் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடந்தது.

யாக வழிபாடுகளை தொடர்ந்து காலபைரவர்-பிரத்தியங்கிராதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 16வகையான அபிஷேக ஆராதனைகளுடன் கூடிய வழிபாடுகள் நடந்தது. வழிபாடுகளைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

யாக வழிபாட்டில் மலேசிய பக்தர் டத்தோ செந்திநாதன், அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் அறக்கட்டளையினர், ஆலய நிர்வாகிகள், மகளிரணியினர் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications