தைப்பூசம்: வடலூரில் ஜோதியாக காட்சி தந்த வள்ளலார் - பக்தர்கள் தரிசனம்
தைப்பூச நாளில் வள்ளலார் முக்கியடைந்தார். இறைவன் ஒளிமயமானவன் என்பதை உணர்த்தும் வகையிலேயே தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இன்றைய தினம் ஏராளமானோர் வடலூரில் குவிந்துள்ளனர்.
Recommended Video

கடலூர்: வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க சுவாமிகளால் வடலூரில் சத்திய ஞான சபை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு, ஆண்டுதோறும் தைப்பூச நாளன்று ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடி நின்றேன் என்று பாடி ஜீவ காருண்யத்தை அன்றே உலகுக்கு எடுத்துரைத்தவர் வள்ளலார். சத்தியஞான சபையை இவர் வடலூரில் நிறுவினார்.
தைப்பூச நாளில் வள்ளலார் முக்கியடைந்தார். இறைவன் ஒளிமயமானவன் என்பதை உணர்த்தும் வகையிலேயே தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

தைப்பூச ஜோதி தரிசனம்
தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழா, இன்று தொடங்கியது. காலை 6 மணிக்கு 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. அப்போது அதிகாலை முதலே காத்திருந்த பக்தர்கள், ‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை' என்ற மகா மந்திரததை முழங்கி ஜோதி தரிசனம்

ஜோதி வடிவில் இறைவன்
காலை 10, பிற்பகல் ஒரு மணி, இரவு 7, 10 மணி மற்றும் நாளை வியாழக்கிழமை காலை 5.30 மணி என 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறும். ஜோதி தரிசனத்தைக் காண வடலூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

பக்தர்களுக்கு அன்னதானம்
தைப்பூச ஜோதி தரிசன விழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக எல்சிடி திரை அமைக்கப்பட்டுள்ளது. ஜோதி தரிசனத்தைக் காண வந்துள்ள வடலூரில் குவிந்துள்ள பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

உலக நன்மை ஹோமம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தனி சன்னதி அமைந்துள்ளது. உலக மக்களின் நலன் கருதி இன்று தைபூச நன்னாளை முன்னிட்டும், வள்ளலார் ஜோதியில் கலந்த நன்னாளை முன்னிட்டும் பீடத்தில் அமைந்துள்ள வள்ளலாருக்கு சிறப்பு பூஜையும், வள்ளலார் ஹோமமும் நடைபெறுகிறது.

தைபூசம் ஹோமம்
வள்ளலார் கொள்கைகளான ஜீவ காருண்யம், மன அமைதி, மனித நேயம், அன்னதானம், மது, மாமிசம் உண்ணாமலிருப்பது, ஜாதி, இனம், சமுதாய வேறுபாடின்றி நடப்பது, எக்காரியத்திலும் பொதுநோக்கத்தோடு இருப்பது போன்ற கொள்கைகளை நாமும் பின்பற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கப்பெற்று அனைவரிடத்தும் அன்பு செலுத்தும் எண்ணமும் மேலோங்கும். இன்றைய தினம் அன்னதானமும் நடைபெற உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications