ஆட்சியில் அமர துடிக்கும் ஸ்டாலின் கனவெல்லாம் ஒருபோதும் பலிக்காது.. தங்கதமிழ்ச்செல்வன் விளாசல்
ஆட்சியில் அமர துடிக்கும் மு.க.ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று தினகரன் ஆதரவு தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
மதுரை: திமுக செயல் தலவைர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமர துடிக்கிறார். அவரது கனவு ஒரு போதும் பலிக்காது என்று ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ., தங்கதமிழ்செல்வன் கூறினார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து இன்று காலை தங்கதமிழ்ச் செல்வன் எம்.எல்.ஏ., விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த 32 எம்.எல்.ஏ.க்கள் தினகரனை சந்தித்தோம். அதில் எந்த தவறும் இல்லை. 122 எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு.க.தான். பிரிந்து சென்றவர்கள் விரைவில் எங்களுடன் வந்து சேருவார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு கொடுக்குமா? என்பதை இப்போது சொல்ல முடியாது. முதலில் வேட்பாளரை அறிவிக்கட்டும் பின்னர் அதுபற்றி பார்ப்போம். காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் எங்களிடம் ஆதரவு கேட்டால் பரிசீலிப்போம். ஆதரவு யாருக்கு என்பதை பொதுச் செயலாளர் தான் முடிவு செய்வார்.
அன்புமணி ராமதாஸ், ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த ஆட்சியை பினாமி ஆட்சி என கூறி வருகின்றனர். தமிழகத்தில் ஆட்சியில் அமர மு.க.ஸ்டாலின் துடிக்கிறார். அதனால்தான் இப்படி பேசுகிறார். அவரது கனவு எல்லாம் ஒருபோதும் பலிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications