கானல் நீர் போல தங்கதமிழ்ச்செல்வனின் கனவு மறைந்துவிடும்... செங்கோட்டையன் பதிலடி
Recommended Video
திருச்செந்தூர்: ஆட்சியை கலைத்து விடலாம் என தங்கதமிழ்ச்செல்வன் பகல் கனவு காண்கிறார். அவரது கனவு சாலையில் வரும் கானல் நீர் போல மறைந்துவிடும் என்று அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் செங்கோட்டையன் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைத்து விடலாம் என்று தங்க தமிழ்ச்செல்வன் பகல் கனவு காண்கிறார் . அவரது கனவு சாலையில் வரும் கானல் நீர் போன்றது என்றார்.

மேலும், வரும் கல்வி ஆண்டில் கல்விக்காக புதிய திட்டங்களை கொண்டு வர இருக்கிறோம் என்று கூறிய செங்கோட்டையன், ரோபோ மூலம் பள்ளியை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் புதிய சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இடைத்தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபறந்து வருகிறது. ஆட்சியை தீர்மாணிக்கும் தேர்தலாக அமையும் என்பதால், அதிமுக தலைமை பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. பலன் அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications