12 ஆண்டுக்குப் பின் காங். தலைவர்கள் ஆலோசனை... -மோதல்.. - ப.சி குரூப் புறக்கணிப்பு
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் 12 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை ஏற்பட்டது. முக்கிய நிர்வாகிகள் அழைக்கப்படாததை தங்கபாலு கோஷ்டியைச் சேர்ந்த 10 பேர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பட்டியலை அண்மையில் கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். இந்த பட்டியலில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், புதிய காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக கட்சித் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

கனஜோரான கூட்டம்
முன்னாள் எம்.பி.க்கள், பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், கந்தசாமி, மாநில நிர்வாகிகள் சக்தி வடிவேலு, சாருபாலா தொண்டைமான், கே.சிரஞ்சீவி, ஆர்.தாமோதரன், நாசே ராமச்சந்திரன், விடியல், சேகர், சி.டி.மெய்யப்பன், விஷ்ணுபிரசாத், தாம்பரம் நாராயணன், தணிகாசலம் மற்றும் என்.ரங்கபாஷ்யம், சிதம்பரம் ஜேம்ஸ், விஜயகுமார் உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தேர்தல் வியூகம்
இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணியில் இருந்து தி.மு.க வெளியேறியது மற்றும் தேர்தல் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் வாசன் - தங்கபாலு ஆதரவாளர்களுக்கிடையே மோதல் வெடித்தது.

தங்கபாலு கோஷ்டி
தங்கபாலு ஆதரவாளர்களான மாநில துணைத் தலைவர்கள் டி. சதாசிவலிங்கம், ஆர். தாமோதரன், தென் சென்னை மாவட்டத் தலைவர் ஆர்.கே. வெங்கட் உள்ளிட்டோர் எழுந்து நின்று தங்கபாலுவை ஏன் அழைக்கவில்லை எனக் கூறி கோஷமிட்டனர்.
அவர்களை மாநிலத் தலைவர் ஞானதேசிகன் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவர்கள் கோஷமிட்டவாறு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வாசன் கோஷ்டி
அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய வாசன் ஆதரவு நிர்வாகிகள், முதல் கூட்டத்திலேயே மோதலில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்காக அனைவரும் கையெழுத்திட்ட மனுவையும் அளித்தனர்.

சிதம்பரம் கோஷ்டி
கூட்டத்தில் ப. சிதம்பரம் ஆதரவு மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஆனால், சிதம்பரம் ஆதரவாளரான தாம்பரம் நாராயணன் கலந்து கொண்டார். அதுபோல, தங்கபாலு ஆதரவாளரான திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் சுப. சோமுவும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஞானதேசிகன்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஞானதேசிகன்,
மாநிலத் தலைவர் என்ற முறையில் புதிய நிர்வாகிகளுடன் சாதாரண முறையில் கலந்துரையாடவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் தான் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் அழைக்கப்படவில்லை. புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் விரைவில் நடைபெறும். அதில் அனைவரும் பங்கேற்பார்கள் என்றார்.

எல்லோருக்கும் பதவிகள்
நான் ஒருதலைபட்சமாக முடிவு எடுப்பவன் அல்ல. எல்லோரையும் மரியாதையுடன் அழைத்துப் பேசுபவன். எல்லோருக்கும் பதவிகள் கொடுப்பது சாத்தியமல்ல. பதவிகள் கொடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. யாருக்காவது குறைகள் இருந்தால் மேலிடத்தில் முறையிடலாம். அதற்கான வாய்ப்புகள் காங்கிரஸில் உள்ளன. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் கூட்டத்தில் இருந்து சிலர் வெளிநடப்பு செய்திருப்பது வருத்தமளிக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடத்துடன் கலந்துபேசி முடிவெடுக்கப்படும் என்றார்

கட்சிப்பணிகள்
வரும் ஜனவரி முதல் தேர்தல் பணி, கட்சிப் பணிகளை காங்கிரஸ் தீவிரப்படுத்தும் என்றார். வட்டார அளவில் மாதந்தோறும் காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்ய நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த நிர்வாகிகள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஞானதேசிகன் தெரிவித்தார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications