தங்கம் தென்னரசு காரிலிருந்து 6 செல்போன்கள், ரூ. 60,000 பணம் அபேஸ்
வேலூர்: முன்னாள் திமுக அமைச்சர் தங்கம் தென்னரசுவின் காரில் வைக்கப்பட்டிருந்த 6 செல்போன்கள் மற்றும் ரூ. 60,000 பணம் ஆகியவை திருடு போயுள்ளது. இதை எடுத்த மர்ம நபர்களைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவி நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கலந்துரையாடல் கூட்டத்திற்காக போயிருந்தது. இதில் தங்கம் தென்னரசுவும் இடம் பெற்றுள்ளார். இந்தக் குழுவினர் நேற்று மாலை வேலூர் சென்றனர். தென்னரசு தனது காரிலிருந்து இறங்கி ஆலோசனைக் கூட்டம் நடந்த ஹாலுக்குள் போய் விட்டார்.

போய் விட்டுத் திரும்பி தனது காரில் ஏற வந்தவர் காரில் வைத்து விட்டுப் போயிருந்த சூட்கேஸ், ஒரு பை ஆகியவற்றைக் காணாமல் திடுக்கிட்டார். அந்த சூட்கேஸில் ரூ. 60,000 பணமும், பையில் செல்போன்கள் 6, ஏடிஎம் கார்டு, எம்.எல்.ஏ. அடையாள அட்டை ஆகியவை இருந்ததாம்.
இதுகுறித்து தங்கம் தென்னரசுவின் கார் டிரைவர் சேகர், வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் புகாரைப் பதிவு செய்துள்ளனர். விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications