முடிஞ்சா ஒருத்தரை இழுத்துடுங்க.. நாங்க மொத்த வந்துர்றோம்.. தங்க தமிழ் செல்வன் சவால்
எங்கள் அணியிலிருந்து ஒருவரையாவது இழுத்துவிடுங்கள். நாங்கள் மொத்தமாக எடப்பாடி பக்கம் வருகிறோம் என்று தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: எங்கள் அணியிலிருந்து ஒருவரையாவது எடப்பாடி பழனிச்சாமி இழுத்து க் கொள்ளட்டும் அவர் பக்கம் நாங்கள் மொத்தமாக சென்று விடுகிறோம் என்று தங்க தமிழ் செல்வன் சவால் விடுத்துள்ளார்.
முதல்வருக்கு எதிராக அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் திநகர் தரப்பு 18 எம்எல்ஏக்கள் புகார் கடிதம் கொடுத்தனர். இது கொறடா உத்தரவுக்கு புறம்பான செயல் என்று கூறி 18 பேரையும் தகுதி நீக்கம் செய்தார் சபாாநயகர்.

முடிவில் தவறில்லை
இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகர் முடிவில் தவறில்லை என்றும் நீதிபதி சுந்தர் சபாநாயகர் முடிவில் தவறு என்றும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.

எடப்பாடி பழனிச்சாமியால்...
இதனால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. 3-ஆவது நீதிபதியாக விமலாவை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமித்தார். இந்நிலையில் சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தங்கதமிழ் செல்வன் அளித்த பேட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் ஓரணியில் உள்ளோம். ஒருவரை கூட எடப்பாடி பழனிச்சாமியால் இழுக்க முடியாது.

நம்பிக்கை இல்லை
யாரும் எடப்பாடி அணிக்கு செல்ல தயாரில்லை. 18 பேரில் ஒருவரை இழுத்தாலும் கூட நாங்கள் மொத்தமாக எடப்பாடி பக்கம் செல்ல தயார். நீதிமன்ற தீர்ப்பில் நம்பிக்கை இல்லாததால் வழக்கு வாபஸ் பெறுகிறேன்.

மக்கள் பணி
எஞ்சிய 17 எம்எல்ஏக்கள் வழக்கை சந்திப்பது அவரவர் விருப்பம். எனது தொகுதி மக்களுக்கு பணியாற்ற எம்எல்ஏ வேண்டும் என்றார் தங்கத் தமிழ்ச்செல்வன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications