கூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் தொடங்கியது மின்உற்பத்தி
கடந்த 5-ந்தேதி 2-வது அணு உலையின் டர்பனில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுது சரிசெய்யப்பட்டு தற்போது மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.
நெல்லை: கூடங்குளம் 2-வது அணு உலையில் டர்பனில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் அணு உலையானது பராமரிப்பு பணிக்காக கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த 5-ந்தேதி 2-வது அணு உலையின் டர்பனில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

அதனை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. சனிக்கிழமை காலை பணிகள் முடிந்து, 2-வது அணு உலை செயல்பட தொடங்கியது. தற்போது 360 மெகாவாட் வரை மின்உற்பத்தி நடந்து வருகிறது.
இந்த மின்உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இன்று அல்லது நாளை 900 மெகாவாட் மின்உற்பத்தியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் அணு உலையில் பராமரிப்பு பணிகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதல் அணு உலையில் மின்உற்பத்தி தொடங்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என கூடங்குளம் அணு உலை வளாக இயக்குனர் (பொறுப்பு) ஜின்னா தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications