தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 21-ந் தேதி கூடுகிறது
சென்னை: தமிழக சட்டசபை வரும் 21-ந் தேதி கூடுகிறது. இக்கூட்டத் தொடரில் 2016-17-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றி, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் கடந்த மாதம் 16-ந் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் தமிழக ஆளுநர் ரோசய்யா உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்று சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் 2016-2017ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 21-ந் தேதி கூடுகிறது என பேரவை செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 21-ந் தேதியன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத் தொடரில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2016-2017ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications