இனி குடித்தால் பிள்ளைகளுடன் எங்காவது போய் விடுவேன்.. மனைவி மிரட்டல்.. கணவர் தூக்கிட்டு தற்கொலை
கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video

மேட்டுப்பாளையம்: தினமும் குடித்துவிட்டு வந்தால் பிள்ளைகளுடன் எங்காவது போய் விடுவதாக மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அன்னூர் சாலையில் ஜீவானந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் வடிவேல். இவருக்கு 38 வயதான இவர் கட்டிட தொழிலை செய்து வந்தார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். காலையிலிருந்து பொழுது முடியும்வரை கட்டிட வேலையில் கடுமையாக உழைத்து வந்தாலும், சாயங்காலம் ஆகிவிட்டால் மது அருந்தாமல் இவரால் இருக்க முடியாமல் போய்விடுகிறது.

தினமும் மது அருந்துவதையே பழக்கமாக வைத்திருந்திருக்கிறார் வடிவேல். வீட்டுக்கு குடித்துவிட்டு வரும்போதெல்லாம் அன்று மனைவியுடன் தகராறுதான். பல முறை தன் கணவரிடம் குடிக்க வேண்டாம் என்று ராஜேஸ்வரி எடுத்து சொல்லியும், அப்போதைக்கு சரி என்று சொல்லும் வடிவேல் இரவு வரும்போது மதுபோதையுடனே வீட்டுக்கு வருவாராம். மீண்டும் தகராறு - வாக்குவாதம்.
இதேபோல சம்பவத்தன்றும் குடித்துவிட்ட வடிவேலுவை கண்டித்துள்ளார் ராஜேஸ்வரி. ஆனால், அதனை கொஞ்சமும் காதிலேயே வாங்கி கொள்ளாமல் தூங்க சென்றுவிட்டார் வடிவேல். மறுநாள் காலையில் தூங்கி கொண்டிருந்த வடிவேலுவை எழுப்பிய ராஜேஸ்வரி, எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தினமும் இப்படி குடித்துவிட்டுத்தான் வருகிறீர்கள், இனியும் இப்படி குடித்தால் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு எங்காவது சென்றுவிடுவேன் என்று சொல்லிவிட்டு, அருகிலுள்ள கோயிலுக்கு சென்றுவிட்டார்.
இதனால் வெறுப்பான வடிவேல், அறையினுள் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரம் அக்கம்பக்கத்திலுள்ளோர் ராஜேஸ்வரியை பார்க்க வீட்டிற்குள் வந்தனர். அப்போது வடிவேல் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வடிவேலு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications