மதுரையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; கல்லூரி மாணவர் சாவு: 16 பேர் காயம்
மதுரை: மதுரையில் சுங்கச்சாவடித் தடுப்பில் மோதி அரசு பஸ் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பஸ்சில் இருந்த பயணிகளில் 16 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அருப்புக்கோட்டைக்கு நேற்று இரவு 7 மணிக்கு அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. பேருந்தில் 35-க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர்.

பேருந்து 7.20-க்கு மதுரை சுற்றுச்சாலையில் வந்தபோது, வண்டியூர் பிரிவு முன்பாக உள்ள, மாநகராட்சி சுங்கச்சாவடி சாலைத் தடுப்பில் பேருந்து மோதி இடதுபுறமாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர் வேலு என்ற ராஜா(19) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்தில் இருந்த பயணிகளில் 16 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக அண்ணாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications