புழல் சிறையில் தீவிரவாதிகளால் ஜெயிலர், காவலர் சிறைபிடிப்பு...பேச்சுவார்த்தைக்குப் பின் விடுவிப்பு
சென்னை : புழல் சிறையில் ஜெயிலர் உள்ளிட்ட 4 பேர் மீது அங்கு அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில், பக்ருதீன் ஆகிய கைதிகள் தாக்குதல் நடத்தி சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழல் சிறையில் 800-க்கும் அதிகமான விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் பாஜக பிரமுகர் டாக்டர் அரவிந்த ரெட்டி, இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் உள்ளிட்ட இந்துப் பிரமுகர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பக்ருதீன், பன்னா இஸ்மாயில் உள்ளிட்டவர்களும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜெயிலர் இளவரசன் ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு செய்யும்போது, அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பன்னா இஸ்மாயில் மற்றும் பக்ருதீன் ஆகியோர் அறைகளில் சத்தம் வந்துள்ளது.
அதைக்கேட்டு எட்டிப்பார்த்த போது ஜெயிலர் இளவரசனை, அவர்கள் இருவரும் தாக்கியுள்ளனர். இதை தடுக்க ஓடிவந்த சிறைக்காவலர் முத்துமணி, துணை ஜெயிலர் மோகன், இரண்டாம் நிலை காவலர் மாரி ஆகியோரை இருவரும் தாக்கி 4 பேரையும் சிறைபிடித்தனர்.
கைதிகள் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த சிறைக்காவலர் முத்துமணி, ஜெயிலர் இளவரசன், தலைமைக் காவலர் டேவிட் செல்வராஜ் ஆகியோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துணை ஜெயிலர் மோகன், இரண்டாம்நிலை காவலர் மாரி ஆகியோரை சிறைக்குள்ளேயே தீவிரவாதிகள் சிறைபிடித்தனர். இதைத் தொடர்ந்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி திரிபாதி, டிஐஜி மவுரியா மற்றும் அதிகாரிகள் சிறைக்கு சென்று கைதிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, சிறைபிடிக்கப்பட்ட துணை ஜெயிலர் மோகன், இரண்டாம்நிலை காவலர் மாரி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications