For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவின் பந்துகளை உடனுக்குடன் அடிக்கும் அதிமுக.. ஆனால் மறந்தும் அழகிரியை கண்டுக்கலை பாருங்களேன்!

திமுக, அதிமுகவினர் ஒருவருக்கொருவர் கடுமையாக சாடிக் கொள்கின்றனர்.

By Hema Vandhana
Google Oneindia Tamil News

Recommended Video

    திமுகவுக்கு பதில் கொடுக்கும் அதிமுக அழகிரியை மட்டும் கண்டுக்காதது ஏன் ?

    சென்னை: திமுக-அதிமுகவுக்கும் நடுவில் மோதல் விஸ்வரூபமெடுத்து வருகிறது.

    திமுகவும், அதிமுகவும் கிட்டத்தட்ட 50 வருஷங்களாக எலியும் பூனையுமாக இருந்தாலும் இப்போது அதிகமாகவே பகை முட்டிக் கொண்டு வருகிறது. இது கருணாநிதி இறந்த பிறகு இன்னும் அதிகமாகவே உள்ளது.

    நடந்து முடிந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் முதல் கூட்டம் என்றாலும் அவர் முகம் டென்ஷனாகவே இருந்ததாம். அதுவும் இல்லாமல், ஸ்டாலின் என்ன பேச போகிறார் என்பதை கேட்க அனைவருமே ஆர்வமாக இருந்தனர். அப்போது பேசிய ஸ்டாலின், "இனி வரும் தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றால் மட்டுமே மக்கள் மதிப்பார்கள், இல்லையென்றால் அதிமுகவிற்கு நேர்ந்த கதி தான் நமக்கும் என்பதால், திருவாரூர், திருப்பரங்குன்ற களப்பணியில் இறங்குகள்" என்று அட்வைஸ் செய்தார்.

    சத்தியம் செய்யுங்கள்

    சத்தியம் செய்யுங்கள்

    தொடர்ந்து பேசிய அவர், "இனி வரும் காலங்களில் அதிமுகவுடன் எந்த உறவையும் வைக்கக்கூடாது, கருணாநிதிக்கு மெரினாவில் இடம் இல்லை என்று கூறி துரோகம் செய்த கட்சி அது. அதனால் இனிமேல் அதிமுகவுடன் எந்த தொடர்பும் வைக்க மாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டு இங்கிருந்து செல்லுங்கள்" என்று சற்று ஆதங்கத்துடனே சொன்னாராம்

    துரைமுருகன் சாடல்

    துரைமுருகன் சாடல்

    கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வழங்காத விவகாரம் திமுக தலைமையிலிருந்து தொண்டர்கள் வரை அதிகமாகவே பாதித்துள்ளது. குட்கா விவகாரம் குறித்து பொருளாளர் துரைமுருகனிடம் கருத்து கேட்டதற்கு, ''அமைச்சர் விஜயபாஸ்கரை குற்றவாளி என்று, தமிழக முதல்வர் சொல்ல பயப்புடுகிறார். அப்படி கூறினால் எங்கே தன்னை மாட்டி விடுவார்களோ என்று கூற மறுக்கிறார் என்று'' பகிரங்கமாகவே சாடினார்.

    கூட்டணி முறிப்பாரா?

    கூட்டணி முறிப்பாரா?

    ஆனால் திமுக தரப்பில் எந்த ஒரு குற்றச்சாட்டும், எதிர்மறை விமர்சனம் வைத்தாலும் அதற்கு அதிமுகவும் உடனுக்குடன் பதிலடி கொடுத்துதான் வருகிறது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலின் மீது அதிக பாய்ச்சலிலேயே இருக்கிறார். 7 தமிழர் விடுதலையில் ஸ்டாலின் என்ன செய்தார் என்றும்? கடந்த காலங்களில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு 7 பேர் விடுதலைக்கு எந்த மாதிரியான நடவடிக்கையை திமுக எடுத்தது என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதோடு 7 பேர் விடுதலைக்கு காங்கிரஸ் ஒத்துழைக்காவிட்டால், அவர்களுடனான கூட்டணியை முறித்து கொள்ள ஸ்டாலின் தயாரா என்றும் சவால் விடுத்தார்.

    ஸ்டாலினுக்கு சவால்

    ஸ்டாலினுக்கு சவால்

    அதேபோல, உள்ளாட்சி துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து திமுக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் வேலுமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் வேலுமணி, "திமுகவினரே பல ஆலைகள் நடத்தியுள்ளனர். சாராய ஆலைகள் கூட நடத்தியிருக்கின்றனர். அமைச்சர் அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்த தவறும் நான் செய்யவில்லை. உலக பணக்காரர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரின் பெயர் உள்ளது. இதற்கெல்லாம் பொறுப்பேற்று, தான் வகிக்கும் திமுக தலைவர் பதவியை பதவியையும் அழகிரிக்கோ, துரைமுருகனுக்கோ ஸ்டாலின் கொடுப்பாரா? அப்படி அவர் கொடுத்துவிட்டால், நான் நாளைக்கே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மோதல் வலுக்கிறது

    மோதல் வலுக்கிறது

    இப்படி இரு கட்சிகளிடையே குடுமிப்பிடி சண்டை நாளுக்கு நாள் அதிகரித்தவாறே உள்ளது. அதே சமயம் எக்காரணம் கொண்டும் அழகிரியை தப்பித்தவறி குறைகூட சொல்ல மனம் வரவில்லையே அதிமுகவுக்கு!!

    English summary
    The conflict between DMK and AIADMK strengthens
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X