For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.கே. நகரில் மாபெரும் வெற்றியை பரிசளித்துள்ளனர்.. ஆட்சி மாறப்போகுது - டிடிவி தினகரன்

ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளனர் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    தினகரனின் கல கல பேட்டி- வீடியோ

    சென்னை: கட்சியும் சின்னமும் யாரிடம் என்பது முக்கியமல்ல... ஆனால் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதே முக்கியம் என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன். 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்றும் தினகரன் கூறியுள்ளார்

    ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன் முன்னிலையில் இருக்கிறார். 3 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த ஆர்.கே.நகர் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    The EPS-OPS government fall in three months says TTV Dinakaran

    சின்னம் யாரிடம் இருக்கிறது கட்சி யாரிடம் இருக்கிறது என்பதல்ல மக்கள் யாரிடம் இருக்கிறார்கள் என்பதே முக்கியம். ஆர்.கே. நகர் ஜெயலலிதாவின் தொகுதி. அவருக்குப் பின்னர் யார் ஜெயிக்க வேண்டும் என்பதை முடிவு செய்துள்ளனர்.

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவு தினமான இன்று ஆர்.கே. நகரில் மக்கள் வெற்றியை கொடுத்துள்ளனர். இது எம்ஜிஆர் எனக்கு கொடுத்த ஆசியாகவே கருதுகிறேன். வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்த கலாட்டா பற்றிய கேள்விக்கு பதிலளித்த தினகரன், இன்னும் 3 மாதத்தில் ஆட்சியே மாறப்போகுது.. அப்ப என்ன பண்ணுவாங்க கடல்ல போய் குதிப்பாங்களா என்று கேட்டார்.

    ஆர்.கே. நகர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும், சென்னை முதல் குமரிவரை மக்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

    English summary
    The EPS-OPS government will fall in three months, says TTV Dinakaran, while addressing the media at Madurai airport. He added that the RK Nagar elections result reflects the mindset of the Tamil Nadu people Dinakaran was leading with a big margin over his AIADMK and DMK rivals.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X