ஏழை மக்களை மதியாத அரசு சரியும்.. ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து கமல்ஹாசன் ஆதங்கம்

ஏழை மக்களை மதியாத அரசு சரியும் என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி கமல்ஹாசன் ஆதங்கமாக டிவிட் செய்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ஏழை மக்களை மதியாத அரசு சரியும் என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி கமல்ஹாசன் ஆதங்கமாக டிவிட் செய்து இருக்கிறார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 49 ஆம் நாளாக போராடும் குமரெட்டியாபுர மக்களுடன் மக்களாக அமர்ந்து கமல்ஹாசன் களமிறங்கி உள்ளார். போராட்ட களத்தில் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசன் இன்று தூத்துக்குடி சென்றார்.

The Government which doesnt respect its people will fall down says, Kamal Haasan

தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேட்டி அளித்தார். இதில் ஸ்டெர்லைட் விவகாரம் எவ்வளவு கொடியது என்று அவர் பேட்டி அளித்தார்.

மக்களின் போராட்டத்திற்கு எப்போது துணையாக இருப்பேன் என்றும் கூறினார். இந்த நிலையில் தற்போது அந்த போராட்டம் குறித்து டிவிட் செய்து இருக்கிறார்.

அதில் ''அன்பு வீசும் அந்த குமாரரெட்டிபுர வேப்பமரத்தடியில் சற்று நேரம் அமர்ந்து பார்த்தால் மக்கள் பற்றிய ஞானம் வரும்.தாய்யுள்ளங்களின் ஓலம் கேட்டேன். ஏழை மக்களை மதியாத அரசு சரியும். மக்களே மய்யம் வாய்மையே வெல்லும்'' என்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+