'மதுசூதனன் அணிக்கு' இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது.. அழுத்தமாக சொன்ன ஓ.பி.எஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதுசூதனன் அணிக்குதான் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது என்பதை அழுத்தமாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். மதுசூதனன், ஓபிஎஸ் ஆதரவாளர் என்பது கவனிக்கத்தக்கது.

இரட்டை இலை சின்னம் குறித்த தேர்தல் ஆணைய தீர்ப்பையடுத்து பன்னீர்செல்வம் வெளியிட்ட டிவிட்டில்,
The group lead by Thiru E. Madhusudhanan will be entitled to use the name of the party "#AIADMK" and it's symbol "Two Leaves" #TwoLeavesSymbol pic.twitter.com/kQaoB2wEsF
— O Panneerselvam (@OfficeOfOPS) November 23, 2017
மதுசூதனன் தலைமையிலான அணி, அதிமுக என்ற பெயரையும், இரட்டை இலையையும் பயன்படுத்த உரிமை தரப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எடப்பாடி அணி என்று அவர் கூறவில்லை.
It is a fair verdict by EC. We submitted affidavits to prove that majority of cadres are with us. Based on this, EC has delivered a fair decision. #TwoLeavesSymbol
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 23, 2017
அதேநேரம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட டிவிட்டில், தேர்தல் ஆணையம் சிறப்பான தீர்ப்பை அளித்ததாகவும், பெரும்பாலான நிர்வாகிகள் எங்களோடு இருக்கிறார்கள் என்று நாங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தோம். அந்த அடிப்படையில் தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார். வரிக்கு வரி முதல்வர் நாங்கள் என கூறிய நிலையில், பன்னீர் செல்வம், மதுசூதனன் அணி என குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications