மாசியிலேயே வெயில் பட்டைய கிளப்புதே... கூடவே #கொசுக்கடி
மாசி மாதம் மச்செல்லாம் குளிரும் என்பார்கள். இங்கே வியர்வையில் குளிக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு வெப்பம் தகிக்கிறது.
சென்னை: பங்குனி மாதம் போல வெயில் இப்போதே பட்டையை கிளப்பி வருகிறது. சென்னையில் 87 டிகிரி பாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.
மதுரையில் 93 டிகிரி அளவு பாரன்ஹீட் அளவு வெப்பமும், வேலூரில் 92 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. பகலெல்லாம் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரவில் புழுக்கம் கூடவே கொசுக்கடியின் தாக்கமும் அதிகமாகவே உள்ளது.
இப்பவே இப்படின்னா, இனி பங்குனி, சித்திரை மாதங்களில் சூரியன் உச்சத்திற்கு வரும் போது என்ன பாடு படனுமோ என்று பலரும் பதறுகின்றனர். அக்னி நட்சத்திர வெயிலை சமாளிக்க என்ன செய்யலாம் என்று இப்போதே திட்டமிடுகின்றனர். சமூக வலைத்தளங்களில் வெயிலை சமாளிக்க சிலர் ஐடியாவும் கொடுத்துள்ளனர். படிங்க... ரசிங்க மக்களே.
|
நடந்துக்கிட்டே குளிக்கலாம்
வெயில் கொடுமையை தாங்க முடியாமல் நடந்து கொண்டே குளிக்கிறார் ஒருவர். இவர் செல்லூர் ராஜூவுக்கே ஐடியா கொடுப்பார் போல இருக்கே.
|
அடிக்குது வெயிலு
வெயில் தாங்கலையே... 4 மாசம் பேசமா உள்ள இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
வாட்டி வறுக்குதே
நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை பார்த்து யார் கோபம் காட்டுகிறார்களோ தெரியவில்லை, ஆனால் இயற்கை நன்றாகவே காட்டுகிறது - நெல்லையை வச்சு செய்யுது வெயில் என்று கவலை தெரிவித்துள்ளார் ஒரு வலைஞர்.
|
கொசுவின் முத்தம்
வெப்பத்தால் புழுக்கம் ஒருபக்கம் அதிகரிக்க, கூடவே கொசுக்கடியும் சேர்ந்து கொண்டது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு வலைஞரோ, இரவு முழுவதும் என் அனுமதியின்றி முத்த மழை பொழிந்து என் தூக்கத்தை கலைக்கின்றாய்...#கொசுக்கடி என்று பதிவிட்டுள்ளார்.
|
கொதிக்கும் பிப்ரவரி
கடந்த ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி வெயில் தகித்துள்ளது. சேலம், தர்மபுரியில் அதிக அளவு வெப்பம் பதிவாகியுள்ளது. அதை பார்க்கும் போது இந்த ஆண்டு வெயில் கொஞ்சம் பரவாயில்லைதான் போல.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications