தீவிரமடைகிறது காற்றழுத்த தாழ்வுமண்டலம்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்:வானிலை மையம் எச்சரிக்கை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும், இது வட தமிழகம் மற்றும் தென் தமிழகம் இடையே கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதனால் சென்னை மீண்டும் ஒரு கனமழையை பெறும் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த காற்றழுத்தம் ஆந்திரா நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசூலிப்பட்டினம் அருகே நீடிப்பு
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த குறைந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலம் வடதிசையில் நகர்ந்து மசூலிப்பட்டினம் அருகே நிலை கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம்
வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த குறைந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு ஆந்திரா, ஒடிசா கடற்கரை பகுதியை நோக்கி வரும் 9 ஆம் தேதி நகரும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகரில் 11 செ.மீ., மழை பெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சென்னையில் மேகமூட்டம்
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications