காலையில் கண் விழித்து பார்த்தால்.. பொண்டாட்டியை காணோமே.. அப்படியே ஷாக்கான ராஜேஷ்!
கொடைக்கானலுக்கு ஹனிமூன் வந்த மணப்பெண் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல்: புதுமாப்பிள்ளை ராஜேஷின் நிலைமை இப்படி ஆகும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ராஜேஷூம்தான்!!
உடுமலைப்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு 23 வயதான ஒரு இளம்பெண்ணுடன் 2 வாரத்துக்கு முன்னாடிதான் திருமணம் நடைபெற்றது. இதனால் இரு வீட்டிலும் மணமக்களை ஹனிமூனுக்காக கொடைக்கானலுக்கு அனுப்பி வைத்தார்கள். 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் வந்த ஜோடி, அண்ணாசாலையில் ஒரு ரூம் எடுத்து தங்கினார்கள்.
[ பாலியல் தொல்லையால் பல பாடகிகள் பாதிப்பு- சின்மயி பரபர புகார் ]

மனைவியை காணோம்
2 நாட்களுக்கும் கொடைக்கானலை சுற்றி பார்த்து ஜாலியாக திரிந்தார்கள். இந்நிலையில், காலையில் மாப்பிள்ளை கண்விழித்து பார்த்தால் பக்கத்தில் மனைவியை காணோம். இதனால் ஷாக் ஆன ராஜேஷ் ஓட்டல் முழுவதும் மனைவியை தேடினார். அங்கிருந்தோரிடம் எல்லாம் விசாரித்து பார்த்தார். எந்த தகவலும் கிடைக்கவில்லை.. மனைவியும் கிடைக்கவில்லை!

பெற்றோருக்கு தகவல்
அதனால் மாமியார் வீட்டுக்கு போன் போன் செய்து பதட்டத்துடனும், பயத்துடனுடம் விவரத்தை சொன்னார். அவர்களும் பயந்து போய் சொந்தக்காரர்கள் நண்பர்கள் வீடுகளில் தேட ஆரம்பித்தனர். என்றாலும் புதுமாப்பிள்ளைக்கு பயம் போகவே இல்லை. மனைவிக்கு என்ன ஆனதோ என்று கவலைப்பட்டு கொண்டே இருந்தார். புது இடம் என்றாலும் கொடைக்கானல் முழுவதும் தேட ஆரம்பித்தார்.

விசாரணை ஆரம்பம்
எதற்கோ போலீசில் ஒரு புகாரை தரலாம் என்று நினைத்து அதையும் செய்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து புதுமணப்பெண்ணை தேட ஆரம்பித்தனர். கூடவே பெற்றோரை அழைத்து விசாரணையும் நடத்தினர். விசாரணையில் உண்மை நிலவரம் அனைவருக்குமே தெரிய வர ஆரம்பித்தது. புதுமணப்பெண் ரமேஷ் என்பவரை உயிருக்குயிராக விரும்பி வந்துள்ளார்.

வற்புறுத்தி திருமணம்
இந்த காதல் சமாச்சாரம் வீட்டுக்கு தெரியவரவே, அவசர அவசரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்து ராஜேஷை அந்த பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர். ஆனாலும் அந்த பெண்ணால் ரமேஷை மறக்க முடியவில்லை. அதனால் திருமணம் முடிந்தாலும் ரமேஷிடம் போனில் பேசியும், அழுதவாறும் இருந்திருக்கிறார். பிறகு ஹனிமூனுக்கு கொடைக்கானல் போக போவதாக ரமேஷிடம் காதலி சொல்லி உள்ளார்.

ரமேஷ் - மணப்பெண்
அதனால் ரமேஷ் கொடைக்கானலுக்கே வந்துவிட்டார். ஹோட்டலில் தங்கியிருந்த புதுப்பெண்ணையும் அழைத்து கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார். இந்த தகவல்கள் அனைத்தும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ள. இதையடுத்து, மாயமான இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். புது மாப்பிள்ளையுடன் ஹனிமூன் வந்த புதுப்பெண், தன் காதலனுடன் சேர்ந்து திடீரென எஸ்கேப் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications