For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எந்த "ஆன்டி இண்டியன்" கண்ணு பட்டுச்சோ.. பாஜகவிலும் "தர்மயுத்தம்" தொடங்கிருச்சே!

பாஜக கட்சிக்குள் தற்போது பெரிய தர்மயுத்தம் நடந்து வருவதாக அந்த கட்சியை சேர்ந்தவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழிசை பதவிக்கு ஆபத்தா.. எஸ்.வி.சேகர் ஏன் அப்படி கூறினார்..

    சென்னை: பாஜக கட்சிக்குள் தற்போது பெரிய தர்மயுத்தம் நடந்து வருவதாக அந்த கட்சியை சேர்ந்தவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

    சூர்யவம்சம் படத்தின் கிளைமேக்சில் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ''நட்சத்திர ஜன்னலில்'' பாடலை பாடுவது போலதான் தமிழக பாஜக இவ்வளவு நாட்கள் இருந்தது. எஸ்.வி சேகர் ஏதாவது தவறாக பேசினால் அவருக்கு எச்.ராஜா உதவுவார். எச்.ராஜா தவறாக பேசினால் அவரை தமிழிசை காப்பாற்றுவார்.

    தமிழிசை தவறாக பேசினால் இரண்டு பேரும் சேர்ந்து காப்பாற்றுவார்கள் என்று மிகவும் ஒற்றுமையாக இருந்தார்கள். ஆனால் எந்த ''ஆண்டி இந்தியனின்'' கண்பட்டதோ தெரியவில்லை, இந்த அழகான கூட்டுக்குள் இப்போது பெரிய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. ஆம், தமிழக பாஜகவில் ஒரு கோஷ்டி மோதல் உருவாகி உள்ளது.

    வாய் விட்ட எஸ்.வி சேகர்

    வாய் விட்ட எஸ்.வி சேகர்

    தமிழக செய்தியாளர்களை இழிவாக பேசிய எஸ்.வி சேகர் பெயில் கிடைத்த பின் சில நாட்கள் அமைதியாக இருந்தார். இவர் எங்கே சென்றார் என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது. இடையில் நாடகம் கூட போடாமல் இருந்தார். இந்த நிலையில், நேற்று அவர் அளித்த பேட்டியில் ''தமிழக பாஜக தலைவர் பதவியை கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன்'' என்று கூறினார். இது பாஜகவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை கேட்க சிலருக்கு காமெடியாக இருந்தாலும், இவருக்கு பாஜகவில் கணிசமான ஆதரவு இருக்கிறது என்று கூறுகிறார்கள். அந்த பேஸ்புக் போஸ்ட் பிரச்சனையை தவிர மற்ற விஷயங்களில் பாஜகவில் தேசிய தலைமையின் ''குட் புக்கில்'' தான் இவர் இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

    எச்.ராஜாவின் ஆசை

    எச்.ராஜாவின் ஆசை

    எச்.ராஜாவிற்கு தமிழக பாஜக தலைவராக வேண்டும் என்பது பல வருட கனவு என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அடுத்து யார் வரவேண்டும் என்று யோசித்த போதே இவர் ரேஸில் இருந்தார். இந்த நிலையில் தற்போது தேசிய செயலாளராக இருக்கும் எச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் பதவியை அடைய காய்களை நகர்த்திவிட்டார் என்று கூறுகிறார்கள். தினம் ஒரு சர்ச்சையில் சிக்கினாலும் ''பாஜகவிற்கு செலவில்லாமல் மார்க்கெட்டிங் செய்கிறார்'' என்ற பெயரும் இவருக்கு இருக்கிறது. அதேபோல், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இவரின் ''சீறிய'' செயல்பாடு குறித்து பாஜகவின் தேசிய தலைவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவரும் பாஜக தலைவர் பதவிக்கு எப்படியாவது போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

    தலைவி தமிழிசை

    தலைவி தமிழிசை

    தற்போது தமிழக பாஜக தலைவராக இருக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். முதல்வன் படத்தில் ரகுவரன் சொல்வது போல ''ஒருநாள் இந்த பதவியில் இருந்தாதான் அதோட கஷ்டம் தெரியும்'' என்ற வசனத்தை இவர் சொன்னால் மிக சரியாக இருக்கும். அந்த அளவிற்கு இவர் பாஜக உறுப்பினர்கள் பேசும் சர்ச்சை கருத்திற்கு எல்லாம் பதில் சொல்லியே சிக்கலுக்கு உள்ளாகிறார். கடந்த சில நாட்களாக இவர் போகும் இடமெல்லாம் சர்ச்சையை உருவாக்கிவிட்டு வருவதால், இவர் மீது தேசிய தலைமை அதிர்ச்சியில் இருப்பதாக தகவல் வருகிறது. அதன் காரணமாகவே தலைவரை மாற்றும் திட்டம் குறித்து தேசிய அளவில் ரகசிய ஆலோசனை நடந்து வருகிறது என்று கூறுகிறார்கள். இதனால்தான் எஸ்.வி சேகர் தலைவர் ஆக விருப்பம் உள்ளது என்று கூறி இப்போதே துண்டு போட்டு வைத்துக் கொள்கிறார் என்றும் கூறுகிறார்கள் .

    நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சீதாராமன்

    இதனால் தற்போது தமிழக பாஜக எஸ்.வி.சேகர் - தமிழிசை - எச்.ராஜா - நிர்மலா என்று நான்கு கோஷ்டிகளாக பிரிந்து இருக்கிறது. இதில் அதிக செல்வாக்கு தமிழிசைக்கும் , நிர்மலாவிற்கும் இருப்பதாக தலைமைக்கு தகவல் பறந்தும் இருக்கிறது. தற்போது பாஜகவில் ஒரு மறைமுகமாக தர்மயுத்தம் நடக்கிறது. இன்னும் சில நாட்களில் தமிழகம் வரும் பிரதமர் மோடி இது குறித்து கட்சியினரிடம் எதாவது பேச வாய்ப்புள்ளது. அப்போது அவருடன் அமித்ஷாவும் வருகிறார். இதனால் தமிழக பாஜகவில் சில தினங்களில் பேசிய சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடக்க வாய்ப்புள்ளது.

    நான்கு கோஷ்டி

    நான்கு கோஷ்டி

    இதனால் தற்போது தமிழக பாஜக எஸ்.வி.சேகர் - தமிழிசை - எச்.ராஜா - நிர்மலா என்று நான்கு கோஷ்டிகளாக பிரிந்து இருக்கிறது. இதில் அதிக செல்வாக்கு தமிழிசைக்கும் , நிர்மாலவிற்கும் இருப்பதாக தலைமைக்கு தகவல் பறந்தும் இருக்கிறது. தற்போது பாஜகவில் ஒரு மறைமுகமாக தர்மயுத்தம் நடக்கிறது. இன்னும் சில நாட்களில் தமிழகம் வரும் பிரதமர் மோடி இது குறித்து கட்சியினரிடம் எதாவது பேச வாய்ப்புள்ளது. அப்போது அவருடன் அமித்ஷாவும் வருகிறார். இதனால் தமிழக பாஜகவில் சில தினங்களில் பேசிய சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடக்க வாய்ப்புள்ளது.

    English summary
    The New Dharma Yutham in TN BJP: 4 Top leaders strike each other.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X