கருணாஸ் கைது.. விசாரணையை துவக்கினர் நுங்கம்பாக்கம் போலீசார்
எம்எல்ஏ கருணாஸை போலீசார் இன்று கைது செய்தனர்.
Recommended Video

சென்னை: கைது செய்யப்பட்ட கருணாஸிடம் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகரும் எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ் காவல்துறையினரை மிரட்டும் வகையில் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கருணாஸ் விளக்கம்
இதனால் அவர் மீது 8 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கருணாஸை கைது செய்ய 3 தனிப்படையும் அமைத்தனர். கருணாஸ் தலைமறைவு என்றுகூட தகவல்கள் பரவின. ஆனால் செய்தியாளர்கள் முன்பு கருணாஸ் பேசி தான் எங்கும் ஓடவில்லை என விளக்கம் அளித்திருந்தார்.

உரிய நடவடிக்கை
இதனிடையே, கருணாசின் பேச்சு, முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்திருந்தார். மேலும், சட்டத்தை மீறி யார் பேசினாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியும் அளித்திருந்தார்.

அரசியல் நாகரீகம்
நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பொது இடங்களில் அரசியல் நாகரீகம் அவசியம் என்றும், சட்டம்தன் கடமையை செய்யும் என்றும் கருணாஸ் பேசியது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை சாலிகி ராமத்தில் உள்ள அவர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நாளை கோர்ட்டில் ஆஜர்?
நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் போலீசார் கருணாஸை கைது செய்தனர். அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டகருணாஸ் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். விசாரணைக்கு பின் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம்











Click it and Unblock the Notifications