Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்ப ஒரு சதுர அடி ரூ.200; இப்ப ரூ. 4000! கிளாம்பாக்கம் வீட்டுமனைகளின் விலை விர்ர்ர்ர்..!

Subscribe to Oneindia Tamil

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைக் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்தப் பேருந்து நிலையமானது சுமார் ரூ.394 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்தப் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து வசதிகள் இதுவரை சரியாக செய்து முடிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். கால அவகாசம் தரப்படாமல் அவசரகதியில் பேருந்து நிலையத்தை திறந்துவைத்து விட்டதாகப் பயணிகள் புகார் தெரிவித்தும் வருகின்றனர்.

The real estate industry is booming in Kelambakkam area

அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேருந்து நிலையத்தில் உள்ள சின்ன சின்ன குறைபாடுகள் விரைவில் சீர் செய்துதரப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக ரயில் சேவையும் தொடங்கப்பட உள்ளது. ரூ. 20 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படுவதற்கான வேலைகள் வேகம் எடுத்துள்ளன.

இந்தப் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் வருகின்ற ஆகஸ்டுக்குள் முடிக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

The real estate industry is booming in Kelambakkam area

இதனிடையே இப்போது சென்னை மாநகராட்சி மூலம் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் கேளம்பாக்கம் சாலையின் பின்புறத்தை இணைக்கும் வகையில் 350 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமும் கொண்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளும் தொடங்கி உள்ளன.

ஆகவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தான் சென்னையின் புதிய லேண்ட் மார்க். அதில் இனி எந்தச் சந்தேகமும் இல்லை. ஆகவே, அந்தப் பகுதிகளைச் சுற்றி உள்ள நிலங்களில் மதிப்பு தாறுமாறாக எகிறி வருகிறது.

இதனால் முன்னதாகவே இந்தப் பகுதியில் நிலத்தில் முதலீடு செய்தவர்கள் பெரிய உற்சாகத்தில் உள்ளனர். மேலும் நிலங்களை அதிகமாக வைத்துள்ளவர்கள் கூடுதல் விலைக்கு விற்க முடியும் என்பதாலும் சந்தையில் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் மகிழ்ச்சியில் மிதக்கின்றனர்.

The real estate industry is booming in Kelambakkam area

சில ஆண்டுகள் முன்னதாக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையமானது வரப்போகின்றது என்ற செய்தி வெளியான உடனேயே இங்கே வீட்டு மனைகளின் விலை கிடுகிடுவென்று அதிகரித்துவிட்டது.

முன்னதாக ஒரு சதுர அடி ரூ. 250 ஆக இருந்த விலை, இங்கே பேருந்து நிலையம் வரப்போகிறது என்ற அறிவிப்பு வெளியான உடன் ரூ.750 ஆக உயர்ந்தது. இப்போது பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்ட நிலையில், ஒரு சதுர அடியின் விலை ரூ. 4000 வரை உயர்ந்துள்ளது.

"நான்கு ஆண்டுகள் முன்னதாக ஒரு சதுர அடி 1500 ரூபாய் இருந்தது. இன்று 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதாவது 100% க்கு மேல் விலை உயர்ந்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய்க்கு ஒருவர் வாங்கி இருந்தால் இன்று 4 ஆயிரம். அப்படியே இரண்டு மடங்கு.

The real estate industry is booming in Kelambakkam area

இது ஒரு நல்ல விசயம்தான். இந்தப் பகுதியில் வீட்டு மனை வாங்கியவர்கள் பெரும்பாலும் நடுத்தர மக்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் சென்னையில் மையப்பகுதியில் வாங்க முடியாமல் இங்கே வந்து வாங்கி இருப்பார்கள். அவர்கள் முதலீடு இன்று நல்ல மதிப்பைப் பெற்றுள்ளது. ஆகவே, இது மகிழ்ச்சி தருகிறது" என்கிறார் ரியல் எஸ்டேட் அமைப்புத் தலைவர் கண்ணன்.

சென்னை போன்ற பெருநகரமானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் சென்னையில் குடியேறுவதை விரும்புகின்றனர்.

ஆகவே, வீட்டுமனைகளின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்தத் தேவையை ஈடுகட்டும் விதமாக தற்போது கிளாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள் மாறி வருகின்றன. சில ஆண்டுகள் முன்பு வரை கிராமம் போல் காட்சி அளித்த இந்தப் பகுதி இப்போது நகரம் போல் மாற ஆரம்பித்துள்ளது.

The real estate industry is booming in Kelambakkam area

இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், கிளாம்பாக்கம் சுற்றி உள்ள பகுதிகளில் மிகவேகமாக ரியல் எஸ்டேட் தொழிலானது வளர்ந்து வருவதாக நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

நிலத்தின் மதிப்பு இரு மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலையும் அதிகரித்து உள்ளது.

"இப்போது மீனம்பாக்கம் விமானநிலையம் மெட்ரோ சேவையை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க உள்ளனர். ஆகவே, இன்னும் போக்குவரத்து எளிதாகிவிடும். இதனால் கிளாம்பாக்கம் தொடங்கி, தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம் வரையான வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும்.

The real estate industry is booming in Kelambakkam area

அதன்பின்னர் கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், சிங்கப்பெருமாள் கோயில், மாம்பாக்கம், கேளம்பாக்கம், கண்டிகை,செங்கல்பட்டு வரை வளர்ச்சி அதிகரிக்கும்" என்கிறார் கிரெடாய் அமைப்பின் நிர்வாகி மோதீஷ் குமார்.

ஸ்ரீபெரும்புதூரைப் போல இப்போது அதிவேகமாக வளர்ந்து வரும் பகுதியாக கிளாம்பாக்கம் சுற்றி உள்ள கிராமங்கள் உள்ளன. விரைவில் பரந்தூர் பகுதிக்கு புதிய விமானநிலையமானது அமைந்துவிட்டால், அதன்பின் இதுவே சென்னையின் மையமாகவிடும்.

The real estate industry is booming in Kelambakkam area

இந்தச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் தொலைநோக்கு திட்டத்துடன் அமைக்கப்பட்டுவிட்டால், வீட்டு மனைகள் பெருகிவிடும். அதன்பின்னர் விலையேற்றம் இன்னும் அதிகரித்துவிடும் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் அனுபவம் உள்ளார்கள்.

இன்றைய சந்தை மதிப்பில் சென்னையில் அடையாறு பகுதியில்தான் வீட்டு மனைகளின் விலை அதிகம். சுமார் 2400 சதுர அடி கொண்ட ஒரு கிரவுண்ட் நிலத்தின் விலை ரூ.7 கோடி என்கிறார்கள்.

The real estate industry is booming in Kelambakkam area

ஆகவே நடுத்தர மக்கள் வரும் காலத்தில் கிளாம்பாக்க பகுதியை ஒட்டி தங்களின் நிலத் தேவையை ஈடுகட்டிக் கொள்வார்கள் என்கிறார்கள் நிலத் தரகர்கள்.

The real estate industry is booming in Kelambakkam area
The real estate industry is booming in Kelambakkam area
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+