விரைவில் பொதுக் குழுவை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிப்பேன்: எர்ணாவூர் நாராயணன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன் விரைவில் பொதுக் குழுவை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிப்பேன் என்று கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட எர்ணாவூர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து என்னை நீக்கியதாக சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். விரைவில் பொதுக்குழுவை கூட்டி என்னுடைய மெஜாரிட்டியை நிரூபிப்பேன்.

முதற்கட்டமாக, திருவொற்றியூர் தொகுதி துணைச் செயலாளர் எம்.மதுரை வீரன், நகர செயலாளர் ஏ.மைக்கேல் ராஜ், இளைஞரணி செயலாளர் ஏ.அந்தோணி மில்டன், எம்.கார்த்திக், எம்.மதன் ஆகியோர் தலைமையில் என்னை சந்தித்து ஆதரவு அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications